திங்கள், 25 ஏப்ரல், 2022

பரிசுத்த வேதாகமம் நேர்த்தியானது

*பரிசுத்த வேதாகமம் நேர்த்தியானது*

by : Eddy Joel Silsbee

 

மகத்துவமுள்ள பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

 

ஏராளமான எழுத்தாளர்கள் எண்ணுக்கடங்கா புத்தகங்களை எழுதினார்கள் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

சீர்கேடான சொந்த வாழ்க்கை,

குடிவெறியிலேயும் விபசாரத்திலேயும்,

பாவத்தில் விழுந்து கிடந்தாலும்,

*அவர்களது எழுத்துக்களையோ அபாரம்* என்று ஊர் மெச்சிக்கொள்ளும். சில புத்தகங்களுக்கு அரசாங்கமே விருது வழங்கியும் கவுரவிக்கும்.

 

எழுத்தும், பேச்சும் பிரமாதமாய் இருந்தாலும், சொந்த வாழ்க்கை சரியில்லை என்றால் என்ன பிரயோஜனம்? அதை பின்பற்றுபவர்களும் அந்த எழுத்தாளன் போலவே வீணாகி கனவு உலகத்தில் வாழ வேண்டியது தான்.

 

ஆனால்,

*பரிசுத்த வேதாகமம்* ...

ஏறத்தாழ 32 பேரால், 1400 ஆண்டு காலகட்டங்களில் எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடும்..

 

ஏறத்தாழ 8 பேரால், 100 ஆண்டு காலகட்டங்களில் கிரேக்க/லத்தீன் பாஷைகளில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டையும் கொண்டுள்ளது..

 

முதல் புத்தகம் ஆதியாகமம் துவங்கி கடைசி புத்தகம் வெளிபடுத்தின விசேஷம் வரைக்கும் எழுதின அனைத்து எழுத்தாளர்களும்,  பரிசுத்தவான்களாய் வாழ்ந்தவர்கள், அவர்களைக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் எழுதி வைத்தார். (2தீமோ. 3:16)

 

கடவுள் மூலமாக, கடவுளின் ஜனங்களைக் கொண்டு,

கடவுளை பின்பற்றதக்கதாக எழுதி கொடுத்தவை.

ஆகவே தான் இது *பரிசுத்த* வேதாகமம் என்று அழைக்கப்படுகிறது.

 

பரிசுத்த வேதாகமம்

*பிழையற்றது !! பரிபூரணமானது !! நிறைவானது !!*

 

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2தீமோ. 3:17)

 

அதை படிப்பதோடு நின்று விடாமல் *கிறிஸ்தவர்களுக்கென்று எழுதியிருக்கும்* கட்டளைகளுக்கு நாம் கீழ்படிந்தால் நமக்கான ஆசீர்வாதம் நம்மை தேடி வரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/SLqcq_5qoLg

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக