ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

பயமற்ற பக்தி

*பயமற்ற பக்தி*

by : Eddy Joel Silsbee

 

பராக்கிரமுள்ள தேவனின் நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

தேவ பயமும்,

வேதத்திற்கு கீழ்படிதலும்,

தேவக் கட்டளைக்கு உட்பட்டு அடிபணிவதும்,

தேவனுடைய பிரமாணத்திற்கு தங்களை ஒப்புக்கொடுப்பதும்

*குறைந்திருப்பதை பரவலாகவே காண முடிகிறது*.

 

பயம் (தேவ) அவசியமில்லாதது என்று அநேகரது தன்னிறைவு.

பணம், செல்வாக்கு, வாழ்க்கை தரம் பெருப் பெருக,

சட்டமும் தேவக் கட்டளையும் தன் கையிலேயே இருப்பது போன்ற உணர்வு வந்துவிட்டது.

 

யூதா ஜனம் இப்படி ஒரு நிலையை அடைந்த போது (எரே. 8:4-17) ஆண்டவர் அவர்களை தண்டிக்க *தவறவில்லை*.

 

எரே. 8:6 நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; யுத்தத்துக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள்.

 

எரே. 8:8-9 நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள்; அவர்களுக்கு ஞானமேது?

 

எரே. 8:12 தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

1கொரி. 3:18-20 ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.

 

ஆம், பழைய ஏற்பாடு நமக்கு பாடமாய் கொடுக்கப்பட்டுள்ளது. 1கொரி. 10: 6, 11

 

சூழ்நிலைகளை காரணமாக்கி ஊரை நம்பவைத்தாலும் உண்மை மனதை தேவன் அறிவதால், காலம் தாமதமானாலும் சட்ட மீறுதல் என்பது மனம்திரும்பாத பட்சத்தில் எப்போதுமே கணக்கில் வைக்கப்படுகிறது.

 

தேவனுக்கு பயந்தே நம் செய்கைகள் இருக்கட்டும்.

 

உலகம் நம்மை பரிகசித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும், உத்தமத்தை பற்றிக்கொண்டிருந்தால் தேவனிடத்திலிருந்து நமக்கு வெற்றி தேடி வரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/OFO8AIY0GK8

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக