*யேகோவா சாபோத்*
by : Eddy Joel Silsbee
சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருப்பாராக
எபிரேய வார்த்தைகளில் தேவனுடைய தன்மையை பார்த்து வருகிறோம். இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.
இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா சாபோத்*
ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' se ba'ôt / Yahweh-Tsabbaoth / tsaw-baw', tseb-aw-aw'
தமிழ் அர்த்தம் : சேனைகளின் கர்த்தர்
யேகோவா அல்லது ஏலோஹிம் வார்த்தையுடன் சாபோத்தும் இணைந்து 285 தடவைகளுக்கு மேல் பழைய ஏற்பாட்டில் காணமுடிகிறது.
குறிப்பாக எரேமியா மற்றும் ஏசாயாவில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
யேகோவா சாபோத் முதன் முதலில் 1சாமுவேலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1சாமு. 1:3
சாபோத் [Sabaoth (se bâ'ôt)] என்றால் "படைகள்" என்று பொருள்.
யேகோவா சபோத்தை "படைகளின் இறைவன்" அல்லது சேனைகளின் கர்த்தர் என்று மொழிபெயர்க்கலாம் (1சாமு. 1:3).
இந்த பெயர் ஆன்மீக மற்றும் பூமிக்குரிய ஒவ்வொரு இராணுவத்தின் மீதும் அவரது உலகளாவிய இறையாண்மையைக் குறிக்கிறது.
சேனைகளின் கர்த்தர் வானத்திற்கும் பூமிக்கும் ராஜா. (சங். 24:9-10; 84:3; ஏசா. 6:5).
சில குறிப்பு வசனங்கள் : 1சாமு 1:11; 17:45; 2சாமு 6:18; 7:27; 1இரா 19:14; 2இரா. 3:14; 1நாளா 11:9; சங். 48:8
அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள். ஏசா. 48:2
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக