வியாழன், 9 டிசம்பர், 2021

உபவாசம் என்பது டையட் அல்ல

*உபவாசம் என்பது டையட் அல்ல*

By : Eddy Joel Silsbee

 

தன் வார்த்தையால் சகலத்தையும்  உருவாக்கினராகிய தேவன் தாமே நம்மை இன்னும் சீர்படுத்துவாராக.

 

தலையில் பூ வைத்துக்கொள்ளாமல் இருப்பது,

 

வீட்டில் மாமிச கறி சமைக்காமல் இருப்பது,

 

புது துணி உடுத்தாமல் இருப்பது,

 

வீட்டில் விசேஷம் எதுவும் வைக்காமல் இருப்பது,

 

ஜூஸ், தண்ணீர், கஞ்சி, காபி அல்லது பால் மாத்திரம் குடித்துக்கொண்டு ஆகாரத்தை சாப்பிடாமல் இருப்பது,

 

ஒரு வேளை மாத்திரம் ஆகாரத்தை சாப்பிடுவது போன்றவையெல்லாம் *diet அல்லது சுய கட்டுப்பாடு*.

 

டையட் வைத்துக்கொண்டு தை, *உபவாசம்* என்று சொல்லக்கூடாது !!

 

உபவாசம் என்பதின் அர்த்தம் பட்டினி.

அதாவது, *வாயினுள் எதுவுமே போகக்கூடாது* !!

 

மேலும்,

வேதத்தில் உபவாசம் வரும் இடம் எல்லாம், ஜெபமும் கூடவேயிருப்பதை நாம் கவணிக்க வேண்டும்.

 

வார்த்தைக்கு கீழ்படியுங்கள் என்று கிறிஸ்து சொன்னாரேயன்றி, அவரை போல 40நாள் உபவாசம் இருங்கள் என்று நமக்கு கட்டளையிடவேயில்லை.

 

பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம் என்று ஏசா. 58:7ல் வாசிக்கிறோம்.

 

செய்யவேண்டியதை விட்டு சொல்லாததை செய்வது - மீறுதல் !!

 

நாம் கிறிஸ்துவுக்கு உகந்தவர்களாய் அவரது வார்த்தைக்கே செவிசாய்ப்போம். தேவன் நம்மை மென்மேலும் உயர்த்துவார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/DyTlEhIZLlk

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக