சுய இரத்தத்தில் சம்பாதித்த கிறிஸ்துவின் சபையை சுயஇரத்த பிழைப்பாக்கக்கூடாது
By : Eddy Joel Silsbee
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கும் நம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்முடைய அப்பத்தை, எப்போதும் ஒருவரும் எடுத்துக்கொள்ள முடியாது. நமக்கு என்ன கொடுக்கப்படவேண்டுமோ அது நிச்சயம் கொடுக்கப்படும்.
அதுபோலவே, தடுக்கப்பட்டதை ஒருபோதும் பெற்றுக்கொள்ளவும் முடியாது.
எந்த ஒரு பொறுப்பாளனும் தனக்கு கீழேயிருக்கும் நபர்களுக்கு எல்லா காரியத்திலேயும் பயிற்றுவிப்பது அவசியம்.
தன்னுடைய பதவியை தக்கவைத்துக்கொள்ள;
சொல்லவேண்டியதை தந்திரமாக மறைத்து சூசக ஆளுமை அவசியமில்லை.
தன்னையே சுற்றி துதி பாடிகொண்டிருக்கும்படி தன்னுடைய சீஷர்களை வளர்க்காமல்,
இயேசு கிறிஸ்து தன்னுடைய 12 சீஷரையும்,
வெளியே ஊழியத்திற்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லியனுப்பி பயிற்சி கொடுத்தார் (மத் 10:5-30)
மேலும், 70 பேரை நியமித்து ஊழியத்திற்கு பயிற்சி கொடுத்து ஜனங்களுக்குள் அனுப்பினார். லூக்கா 10:1-18
பாஸ்டருக்கு அல்லது பெரிய பாஸ்டருக்கு தான் இந்த அதிகாரம் உள்ளது என்று சொல்லாமல் தாங்களே அதை செய்யும் அதிகாரத்தையும் இயேசு அவர்களுக்கு கொடுத்திருந்தார். லூக். 10:17
தன் இரத்த சம்பந்தமில்லாத ஒருவருக்கு அவ்வப்போது வசனம் வாசிக்கவும், ஜெபிக்கவும் வாய்ப்பு கொடுக்கும் ”உங்கள் தாராள குணத்தோடு” நிறுத்திக்கொள்ளாமல் சபையில் இரட்சிக்கப்பட்ட அனைவரும் ஊழியர்களாக வளர்ந்து சபையில் முன் நின்று அனைத்து ஊழியங்களையும் செய்ய மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்.
ஒற்றை வேருடன் வளர்ந்த ஆலமரம், தன் மரத்தை சுற்றி விழுதுகளை தரை மட்டும் விழ செய்து, அவைகளும் வேராக வளர்ந்து காலூன்றி நிற்கும்போது,
ஆதி வேர் தளர்ந்தாலும்,
சுற்றியுள்ள வேரானது,
முதல் உறுவெடுத்த வேரைத் தாங்குகிறதல்லவா?
இயேசு தனி ஒருவராக வந்து,
12 பேரைத் தேர்ந்தெடுத்து, (மத். 10:1)
பின்னர் 70 (லூக்கா 10:1)
பின்னர் 120 (அப். 1:15)
பின்னர் 3000 என்றும் (அப் 2:41),
பின்பு 5000 என்றும் (அப் 4:4),
பின்பு எண்ணுக்கடங்காத திரளான (அப் 5:14) வளர்ச்சியை கிறிஸ்தவம் பெற்றது.
மாத வருமானத்தை தனக்கென்று பாதுகாக்கும்படி;
சொந்த மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, கொளுந்தன் போன்ற சொந்த குடும்பங்களை மாத்திரமே விசேஷ அழைப்பின் நாளில் ஒன்று சேர்த்து; துரைக்கு கணக்கு காண்பிக்கும் சுய கவுரவ ஊழியத்தின் வலையிலிருந்து வெளியே வந்தால், *சபைகள் வளருவதைவிட ”சபை வளரும்” * !!
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். ரோமர் 2:6
எடி ஜோயல் சில்ஸ்பி
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
Q&A Biblical Whatsappல் இணைய : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F
இப்பதிவின் YouTube லிங்க்: https://youtu.be/EKjbayuz8E4
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக