*மோளேகுவின் மேளங்கள்*
By : Eddy Joel Silsbee
ஆறுதலின் தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஜீவனுள்ள தேவனை நாம் தொழுதுக்கொள்கிறோம்.
நம்மை காண்கிறவர் அவர்.
நம் ஜெபத்தை கேட்கிறவர்.
நம் சூழ்நிலையை உணர்கிறவர். (யாத்திராகமம் 3:7)
நம் ஜெபம் கேட்கப்படும்படி மணி அடிக்கவோ,
கைகளை தட்டவோ,
மேளத்தை முழங்கவோ வேண்டியதில்லை! ஏசா. 1:15
புதிய யுக்தியுடன் கடந்த 10 வருடங்களாக கைகளைத் தட்டிக்கொண்டே ஜெபிக்கும் பழக்கம் கிறிஸ்தவ மதத்தினர் மத்தியில் எங்கேயிருந்து வந்தது?
யார் நுழைத்தது?
பரிசுத்த வேதாகமத்தில் எங்கேயும் சொல்லப்படாத , அனுமதியில்லாததை, அங்கீகரிக்காததை, கட்டளையிடாததை, அவர் முன்னிலையிலேயே ஆராதனை என்ற பெயரில் கடைபிடித்தால் தேவன் செவி சாயப்பாரோ?
விளக்கேற்றுவதற்கான அக்கினியானாலும், (லேவி. 10:1-2, யாத். 30:9)
மலை அடிவாரமானாலும், (எண். 20:11-12, 20:8)
தள்ளாடின பெட்டியானாலும், (2சாமு. 6:6-7)
தொழுகையின் அங்கீகரிப்பானாலும் (2நாளா. 26:18-19)
*சுயப்பிரியத்தை நுழைத்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்தனர்* !!
நம் ஜீவனுள்ள தேவன் எந்த காலத்திலும் உறங்குவதுமில்லை.
அவரைத் தட்டி எழுப்பலாம் என்று இவர்கள் செய்யும் முயற்சி புறஜாதியினரின் மத்தியில் எரியும் நெருப்பில் இவர்களும் சேர்ந்து ஊற்றும் எண்ணெய்ப்போல வீணிலே வழங்கும் செயல்.
அந்நிய ஆராதனைக்காரர்களின் முறைமைகளை கைக்கொள்ள வேண்டாம் என்று தீர்க்கதரிசிகள் சொல்லி சொல்லி மடுத்து போனார்கள்.. யார் செவி சாய்ப்பது? உபா. 18:9
*மாம்சீக பரவசமும், மாம்சீக உற்சாகமும் “பரிசுத்தம்” என்ற எண்ணத்தைக் கைவிட்டு* ஜீவனுள்ள தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுதுக் கொள்ளவேண்டும்.
சத்தியத்திற்கு கீழ்படியவில்லையென்றால் கைகளைத் தட்டினாலும் மேளங்களைக் கொட்டினாலும் வாத்தியங்களை வாசித்தாலும் இனி வரும் காலங்களில் ஒருவேளைத் தங்கள் சரீரங்களைக் கீறிக்கொண்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை !!
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. நீதி. 28:9
முறையான இரட்சிப்பை பெற்றுக்கொண்டால் தேவ சித்தம் கைக்கூடும்.
வேர் இருக்கும் இடம் முறையானதாயிருந்தால் கனியும் செம்மையாய் இருக்கும். கொலோ. 2:6
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/K_IOVS_Do0Y
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக