#1117- *கைகளை உயர்த்தி ஜெபிக்கவேண்டியது அவசியமா*?
*பதில்* : பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின தனது முதலாம் நிருபத்தில் 2ம் அதிகாரம் 8ம் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்”.
கைகளை உயர்த்துவது என்பது ஜெபத்தைக் குறிக்கிறது. கைகளை பரலோகத்தை நோக்கி உயர்த்துவது ஜெபத்தின் பொதுவான அணுகுமுறையாக பழைய ஏற்பாட்டு காலங்களில் இருந்தது. சங். 68:31; யாத். 9:29; 9:33; 1இரா. 8:22; 2நாளா. 6:12-13; ஏசா. 1:15.
வசனத்தை கூர்ந்து கவனிக்கும் பொழுது இங்கே "பரிசுத்தமான கைகளை" என்பது பாவத்தால் கறைபடாத, அக்கிரமத்தின் எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாத கைகளைக் குறிக்கிறது.
மேலும், ஜெபமானது இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்து தனது சீஷருக்கு ஜெபிக்கக்கற்றுக் கொடுக்கும் போது
சரீர முறைகள் எதையுமே அவர் குறிப்பிடவில்லை என்பதைக் கவனிக்கவும். வழக்கமாக மனிதர்களாகிய நாம் ஜெபம் என்றதும் முழங்கால் படியிடுவதும் எழுந்து நிற்பதும் கண்களை மூடுவதையுமே பிரதானமாக முன்னிறுத்துவோம்.
பலவேறு வகையில் தங்கள் சரீர முறைகளை வைத்து ஜெபித்த முறைகளை கீழே பட்டியலிடுகிறேன்:
நின்ற நிலையில் : 1இரா. 8:22-23; லூக்கா 18:10-14; மாற்கு 11:25
உட்கார்ந்த நிலையில்: 1இரா. 19:1-5; நெகேமியா 1:4
முழங்காலில் நின்று : லூக்கா 22:41; அப். 9:40; 20:36; 21:3-6; தானியேல் 6:10
குனிந்த நிலையில் : எஸ்ரா 10:1; சங்கீதம் 95:6
படுத்திருந்த நிலையில் : 2இரா. 20:2
சாஷ்டாங்கமாக : எண். 16:22; 1நாளா. 21:16-17; மத்தேயு 26:39
கைகள் மேல்நோக்கி பறந்து விரித்து: 1இரா. 8:54; 2நாளா. 6:12-13; எஸ்றா 9:5
கைகளை மேலே தூக்கியடி: புலம்பல் 2:19; சங். 28:2; 141:2; 1தீமோ. 2:8
மார்பை அடித்துக்கொண்டு: லூக்கா 18:13
வானத்தை நோக்கிப் பார்த்து: யோவான் 17:1
கீழ்நோக்கிய கண்களுடன்: லூக்கா 18:13
உபவாசம் இருந்து சனல் ஆடை தரித்து சாம்பலில் உட்கார்ந்து : சங். 35:13-14; தானி. 9:3
தேவன் நமது இருதயத்தையே பார்க்கிறார்.
கைகளை தூக்கி ஜெபிப்பது என்பது பார்ப்பவருக்கும் ஜெபிப்பவருக்கும் சரீர பிரகாரமான ஆறுதலை தரலாம். ஆனால், கைகளை உயர்த்தி தான் ஜெபிக்கவேண்டும் என்று இந்த 1தீமோ. 2:8 முன்னிட்டு கட்டாயப்படுத்தினால் தங்கள் கைகள் பரிசுத்தமானதா என்பதை அவரவர் தீர்மானித்துக்கொள்ளவேண்டியது.
பவுலின் கூற்றுப்படி கைகளை உயர்த்தி ஜெபியுங்கள் என்பது : மனிதர்கள் தேவனை அணுகும்போது அவர்கள் அதை தூய்மையான மற்றும் பரிசுத்தமான முறையில் செய்ய வேண்டும் என்பது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக