சனி, 27 நவம்பர், 2021

சரியான ஞானஸ்நானமும் நீதியான ஐக்கியமும் அவசியம்

*சரியான ஞானஸ்நானமும் நீதியான ஐக்கியமும் அவசியம்*

By : Eddy Joel Silsbee

 

திருமுழுக்கினால் நம்முடைய பாவங்களை மன்னித்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

மதம் மாறுவதற்கோ;

 

வேறு சபையில் திருமணம் செய்துக்கொள்வதற்காகவோ;

 

வேறு சபையில் உறுப்பினராவதற்கோ;

 

சொந்த ஜாதியை மேம்படுத்திக்கொள்ளவோ;

 

பலவருடங்கள் வேதம் படித்தாகிவிட்டதால் இனி எடுக்கலாம் என்றோ;  

 

பாஸ்டராக வேலைசெய்ய வேண்டும் என்றோ;

 

அந்தக் குறையை ஏன் வைக்கவேண்டும் என்று சில வாரங்கள் வேறு சபைக்கு சென்று ஞானஸ்நானம் எடுத்துவிட்டு மீண்டும் பழைய ஐக்கியத்தில் போய் சேருவதற்கோ;

 

அல்லது தேவன் என்னை நேரடியாக அழைத்தார் என்றோ;

 

ஞானஸ்நானம் எடுக்கும்படி வேதம் சொல்லவில்லை !!

 

*ஞானஸ்நானம் எடுத்துகொள்ளும் போது நடக்கும் நிகழ்வுகளில் சிலவற்றை பட்டியலிடுகிறேன்* :

 

-கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்படுகிறோம்.

 

-கிறிஸ்துவோடு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறோம்.

 

-கிறிஸ்துவோடு எழுந்து வெளியே வருகிறோம் -ரோ. 6:4-5

 

-புதிய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். யோ. 3:3-5, தீத்து 3:5

 

-அந்தக்ஷணம் வரைக்கும் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது. மாற்கு 1:4, லூக். 3:3, அப். 2:38, 22:16, கொலோ. 2:13

 

-பரிசுத்த ஆவியானவரின் பெலனை பெற்றுக்கொள்கிறோம். அப். 2:38, 9:17-18, 1 கொரி. 12:12-13

 

-கிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம். கலா. 3:27, எபே. 4:24, கொலோ. 3:10

 

-பழைய மனுஷனை களைந்து போடுகிறோம். ரோ. 6:6, எபே. 4:22, கொலோ. 3:9

 

-கிறிஸ்துவோடு ஐக்கியம் பெறுகிறோம். ரோ. 6:5

 

-பரிசுத்ததிற்கென்று பிரித்தெடுக்கப்படுகிறோம். எபே. 5:26

 

-இருதயத்தின் விருத்தசேதனம் பெற்றுக்கொள்கிறோம். கொலோ. 2:11

 

-தேவனுக்கு பிள்ளையாகிறோம். ரோ. 6:17-18, 22

 

-பாவத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு இரட்சிக்கப்படுகிறோம். 1பேதுரு 3:21

 

வேதத்தில் நாம் காணும் சம்பவங்களில்… எடுத்துக்காட்டாக பவுல், கொர்நேலியு, லீதியாள், சிறைச்சாலை அதிகாரி, சிமியோன் மற்றும் 3,000 பேர் இப்படி அனைத்து சம்பவங்களிலும் *உடனடியாக / அந்த நேரத்தில் தானே ஞானஸ்நானம்* பெற்றுக்கொண்டார்கள்.

 

நடுஇரவு என்றாலும், சத்தியத்தை கேட்டு உணர்ந்த போது *கிறிஸ்துவின் உன்னதமான கட்டளைக்கு கீழ்படிய வேண்டியது அவசியம்*.

 

வாரந்தோறும் சத்தியத்தைக் கேட்டும் தனது குமாரனின் கோர மரணத்தை ஒப்புக்கொள்ள மனமில்லாதவரின் ஜெபத்தை பிதாவானவர் எப்படி கேட்டு பலன் தருவார்?

 

ஏதோ கடமைக்கென்று அல்ல;

*பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம்* எடுத்து;

அவ்வாறே கிறிஸ்துவின் சரீரத்தில் இணைந்துள்ளவர்களோடு சேர்ந்து வாரந்தோறும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுக்கொள்பவர்களுடன் இணைந்திருந்து கிறிஸ்தவராக வாழவேண்டும். 1கொரி. 1:9; 10:16, 20; 2கொரி. 6:14; பிலி. 2:1-2;  1யோ. 1:3, 6

 

இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேதத்தின்படி பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு தேவனுக்கு கீழ்படியுங்கள்.

 

தேவன் சகலத்திலும் எப்போதும் துணை நிற்பார் !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/U_TCBr0A8Is

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக