வெள்ளி, 26 நவம்பர், 2021

வாழ்க்கையின் மாராவை மாற்றும் சிலுவை மரம்

*வாழ்க்கையின் மாராவை மாற்றும் சிலுவை மரம்*

By : Eddy Joel Silsbee

 

சிலுவை மரத்தில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஒருவரும் உபயோகிக்க முடியாத அளவிற்கு கசப்பாக இருந்தது *மாராவின் நீர்*

 

பிரயாணக் களைப்பில் வந்த முழு இஸ்ரவேல் ஜனங்களும் குடிக்கும் அளவிற்கு போதுமானதான தண்ணீர் இருந்தும் அந்த தண்ணீரை உபயோகபடுத்த முடியவில்லை.

 

தன் கசப்பினால், எவருடைய பயன்பாட்டிற்கும் பிரயோஜனப்படாமல், அத்தனை காலங்களும் வீணாய்க் கிடந்த நீர் அது.

 

தன்னுடைய கசப்பினால் கேட்பாரற்று கிடந்தது.

 

தேவன் இடைப்பட்டதால்; ஒரு மரத்தை அந்த தண்ணீரில் போடச்சொல்ல... கசப்பு நீங்கி மதுரமாய் மாறியது !! (யாத். 15:22-25)

அனைவருக்கும் பிரயோஜனப்பட்டது.

 

*ம்மிடத்திலும்* மற்றவர்களுக்கு பிரயோஜனமில்லாத அளவிற்கு கசப்பை வைத்து இருந்தால்? போதுமான அனைத்து திறமை இருந்தும், ஒருவருக்கும் பிரயோஜனமில்லை..

 

கேட்பாரற்ற வீணான வாழ்க்கையாகும்..

 

எவரும் விரும்பாத, ஒருவரும் அறியாத சூழ்நிலையாகும் !!

 

நமக்காய், தேவன் ஏற்படுத்திய இரட்சிப்பாகிய சிலுவை மரத்தில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்த இயேசுவை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ளும் போது சகல கசப்பும், வைராக்கியமுமான வாழ்க்கை மதுரமாய் மாறும்.. (1கொரி. 15:1-4, கலா. 5:6-23)

 

அனைவருக்கும் பிரயோஜனப்படுவோம்..

தேவ தயவு நம்மை ஆண்டு கொள்ளும்.

அவருடயை ராஜ்யமாகிய சபையில் (கொலோ. 1:13) நாம் இன்னும் உபயோகப்படுவோம்!!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/M14lzzB6W9U

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக