ஞாயிறு, 31 அக்டோபர், 2021

அனைவருமே அழகு தான்

*அனைவருமே அழகு தான்*

By : Eddy Joel Silsbee

 

சகலத்தையும் நேர்த்தியாய் செய்யும் தேவக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தன்னுடைய முக அமைப்பையும்,

தோல் நிறத்தையும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து,

தான் வெள்ளை கறுப்பு இளஞ்சிவப்பு என்றோ

உருண்டை முகம் நீள முகம் சதுர முகம் என்றோ

தன் நிறத்தையும் முகவடிவத்தையும் குறித்து எவருமே வேதனையோ துக்கமோ வருத்தமோ படவேண்டியதில்லை. மாறாக அதற்காய் மிகுந்த சந்தோஷப்படிவேண்டும்.

 

சர்வலோகத்திலும் பணக்காரரும் ஞானியுமாயிருக்கும்படி தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீதின் குமாரனாகிய சாலொமோன் *கறுப்பான சூலமித்தியையே விரும்பி உன்னதப்பாட்டை எழுதியுள்ளார்* !! (உன்ன. 1:5-6; 6:13)

 

தேவசமூகத்திலேயே போய், விசுவாசத்தை சோதித்து பார்க்கும்படி சாத்தான், தேவனிடம் உத்தரவு கேட்டுக்கொள்ளும் அளவிற்கு இருந்த யோபுவின் தோல் கறுப்பாக மாறினது !! யோபு 30:30

 

ஆசரிப்பு கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் வெளிச்சத்திற்கென்று எந்த விளக்கும் கொளுத்தப்படவில்லை !! யாத். 25, 30:1-10

 

கறுப்பாக இருந்த சாலொமோன் இராஜாவிற்கு செல்வமும், ஆஸ்தியும், மரியாதையும், ஜனக்கூட்டமும் ராஜாங்கமும் குறைவில்லாமல் இருந்தது !!

 

மூக்கு, வாய், காது, கண், முக அழகு என்று எல்லாவற்றையும் கவனித்து தன் இஷ்டப்படி நம்முடைய தேவன் தாமே நம் ஒவ்வொருவர் சரீரத்திலும் வைத்து இருக்கிறார்.

 

நாம் எப்படி இருக்கவேண்டும் என்பது அவருடைய பிரியம் !!

 

கண்ணாடியில் நம் முகத்தைப் பார்க்கும் போது என் தேவன் என்னை அவர் பிரியப்பட்டு அமைத்திருக்கிறார் என்று கொடுக்கப்பட்ட நிறத்தையும் வடிவமைப்பையும் சுத்தமாகவும் மேன்மையாகவும் பாதுகாக்கவேண்டும். 1கொரி. 12:18, 15:38, வெளி. 4:11

 

அவர் பிரியப்பட்டு நமக்கு கொடுத்த வடிவை நாம் இன்னும் பிரியத்தோடு பேணிக்கொள்ளவேண்டும்.

 


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
 

இப்பதிவின் YouTube லிங்க்:


 
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக