*பொறாமைப்படாத சந்தோஷம் வேண்டும்*
By : Eddy Joel Silsbee
நம்மை இரட்சிப்புக்குள் வழிநடத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்முடைய எந்த செயலுமே அயலானுக்கு பொறாமையை உண்டு பண்ணுகிறது என்று பிரசங்கி சொல்கிறார். பிர. 4:4
நேர்த்தியாய் இருக்க வேண்டும்,
மற்றவர்களை காட்டிலும் என்னுடையது அருமையாய் இருக்கவேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு எதையும் செய்கிறோம். ஆதி. 4:4
செய்யும் காரியத்தில் உத்தமமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் போது கர்த்தர் துணை நிற்கிறார். 1சாமு. 18:14, பிர. 2:26
தன் செயலில் உத்தமமாய் நடக்கிறபொழுது நம்மை சுற்றியுள்ளவர்கள் அதை கவனிக்க தவறுவதில்லை. 1சாமு. 18:15
கர்த்தரோடு நில்லாதவர்கள் நம் செயலை பார்த்து பொறாமை கொள்வதற்கு ஏதுவாய் இருக்கிறது. ஆதி. 37:4, 11
அவர்கள் நம்மை அயலானாக பார்ப்பதால் இந்த குணம் வருகிறது... ஆனால், நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம்?
மற்றவரின் வளர்ச்சி நமக்கு வெறுப்பையும் பொறாமையையும் கொடுக்க அனுமதிக்காமல் நம் மனதை கட்டுப்படுத்தவேண்டியது அவசியம்.
இயேசுவை சிலுவையில் அறைந்ததற்கு இந்த குணமும் காரணமாக இருந்தது. மத். 27:17, யோ. 5:18, 11:48
மற்றவர்களுடைய
வளர்ச்சி,
உயர்வு,
மேன்மை,
இப்படி எதுவும் நமக்கு பொறாமையை அல்ல, சந்தோஷத்தைக் கொடுக்கட்டும்... பிலி. 2:3, ரோ. 12:10, கொலோ. 3:8, யாக். 3:14, 16, கலா. 5:26
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/o6hwe1nGS2E
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக