வெள்ளி, 29 அக்டோபர், 2021

கீழ்படிதலில் மனிதனை மிஞ்சும் கழுதை

*கீழ்படிதலில் மனிதனை மிஞ்சும் கழுதை*

By : Eddy Joel Silsbee

 

தாழ்மையின் ரூபமெடுத்து நம்மை இரட்சித்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தன்னுடைய எருசலேம் பவனிக்கு ஒருவரும் ஏறியிராத *கழுதையை* கொண்டு வரச்சொன்னார் ஆண்டவர். மாற்கு 11:1-11

 

சண்டையோ கலவரமோ அல்லது போர் மூண்டாலோ, துரித பிரயாணத்திற்கென்றோ கவுரவத்திற்கென்றோ குதிரையின் வேகம் தங்களுக்கு உதவும் என்பதால்; பாதுகாவலர்கள், காவலாளிகள், போர் வீரர்கள், இராஜாக்கள் அனைவரும் கழுதையையல்ல குதிரையையே பயன்படுத்துவார்கள்.

 

ஆனால், சாதாரண ஜனமோ குதிரையை வைத்துக்கொள்ள வசதியில்லாமல் கழுதையைப் பயன்படுத்துவார்கள்.

 

தனது முழங்கால்களை இடித்துக் கொண்டு நடக்கும் வகையான நம் ரில் உள்ள கழுதை வகை அல்ல அது..

 

பிரயாணத்திற்கென்று உபயோகப்படும் கோவேறு கழுதைகள் அவை.

 

இந்நாட்களிலும் அரபு நாடுகளின் குக்கிராமங்களில் பயணத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். !!

 

ஒருவரும் ஏறியிராத கழுதை என்றால் : சவாரி செய்ய இன்னும் பயிற்றுவிக்கப்படாதது என்று அர்த்தம் !!

 

இடப்பக்கம் போ,

வலப்பக்கம் போ,

நில்,

ஓடு,

நட போன்ற எந்த கட்டளையையும் கேட்டு படித்திராததும்,

நெறியறியாமல்;

*எஜமானனின்றி தன் இஷ்டத்திற்கு வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கழுதையை தான் ஆண்டவர் தேர்ந்தெடுத்தார்*.

 

அப்படிப்பட்ட ஒழுங்கற்ற ஒரு கழுதைக்கூட நம் ஆண்டவர் கையில் வந்ததும் தன் மீது அமர்ந்திருப்பவரை சீராகக்கொண்டுச் சென்றது...

 

ஆனால்,

சொந்த மொழியில் சகல கட்டளையையும் எழுதி,

அதை போதிக்க ஊழியர்களுகம்,

வசனங்களை ஆழமாய் அறிய வியாக்கியான புத்தகங்களும்,

அநுதின தியானமும்,

வாராவாரம் தேவசெய்தியும்,

இடையிடையே குழுவாக ஜெபங்களும்,

விசேஷக்கூட்டங்களும் போன்ற அனைத்தும் இருந்தாலும்; ஆறு அறிவுள்ள மனிதனோ தன் ஆண்டவரின் கட்டளையை *அப்படியே கீழ்படிய ஆயிரம் காரணங்கள் தேடுகிறான்* !! 1பேதுரு 4:17, 2:7-8

 

நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். 1பேதுரு 1:14-15

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/otcwfuO_Mjc

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக