ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வீட்டில் பிசாசு, வாயிலோ ஜெபம்

*வீட்டில் பிசாசு, வாயிலோ ஜெபம்*

By : Eddy Joel Silsbee

 

தம் பார்வையில் நம்மை வைத்திருக்கும் தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

பள்ளி காலத்திலேயே நாம் படிப்பது:

 

*எதிர்மறை* :

சூரியன் x சந்திரன்

கேள்வி x பதில்

பகல் x இரவு

ஆண் x பெண்

கணவன் x மனைவி

என்று பல உதாரணங்களை பார்க்கிறோம்.

 

ஆம்... உலக வழக்கத்தின்படி ஆணுக்கு நேர் எதிர்மறை பெண்.

 

ஆணுக்கு “உடல்” வலிமை,

பெண்ணிற்கு  “மன” வலிமை

 

ஆண்  “ஞாபக” குறைவு,

பெண்  “ஞாபக” புலி !

 

ஆண்கள் சுலபமாக “தவறுகளை மறப்பார்கள்”.

பெண்கள் தனக்கு இழைக்கப்பட்டதை “மறப்பது சவால்”.

 

ஆண்கள் எப்போதும் “மேலோட்டமாய் கவனிக்கிறவர்கள்”.

பெண்களோ மிகவும் “உன்னிப்பாக எல்லாவற்றையும் ஆராய்வார்கள்”.

 

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

 

ஆனால் தேவன்,

பெண்ணை உண்டு பண்ணியது ஆணுக்கு எதிர்மறையாக இருக்கவா? நிச்சயமாக கிடையாது.

 

*ஏற்ற துணையாகவே* உண்டு பண்ணினார்! ஆதி. 2:18

 

கணவனுக்கு *ஏற்ற துணையாய் இருக்கும்படி மனைவியை* உண்டு பண்ணினார். 1 கொ. 11:9 & 1 பேதுரு 3:7

 

இல்லாததை இருப்பது போல ஜோடித்து,

ஒருவரை ஒருவர் சந்தேகித்து,

முரண்டு பிடித்து நில்லாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து,

ஏற்ற தாழ்வுகளை சரி செய்து, ஒருவனுக்கு ஏற்ற ஒருவளாய் ஒரே சரீரமாய் வாழ வேண்டும் என்பது தான் தேவனுடைய கட்டளை.

 

வெறுக்க பல காரணங்கள் இருக்கலாம்... சொந்த மனைவியை / கணவனை *நேசிக்க ஒரே ஒரு காரணம் கிடைக்காதோ*?

 

மிக சொற்பமான அன்பு இருதயத்தில் இருந்தாலே கணவன் மனைவியினரிடையே பிரிவு இருக்காது. 

 

*அன்பு இல்லாத இருதயமோ சகலத்தையும் தீமையாக பார்க்கும்*. 1கொரி. 13:7

 

மனைவியிடமோ / கணவனிடமோ (தன் சொந்த சரீரத்தில்) கோபத்தையும் பிரிவையும் வைத்துக்கொண்டு பத்தாயிரம் முறை ஸ்தோத்திரம் அல்லேலூயா Praise the Lord என்று கதறி உபவாசம் இருந்தாலும், நீங்கள் ஏறெடுக்கும் எந்த துளி ஜெபங்களும் உங்கள் வீட்டுக்கூறையை தாண்டாது. முதலாவது உங்கள் சொந்த கணவனிடம் அல்லது மனைவியினிடம் உண்மையான அன்பை செலுத்துங்கள். பிற்பாடு மற்றவர்களுக்காய் ஜெபிக்கலாம்.

 

சொந்த கணவன் மனைவி உறவை சரிசெய்யாமல் ஊருக்காகவும் சபைக்காகவும் உலகத்திற்காகவும் ஜெபக்கிறேனென்று உங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம் !!  1பேதுரு 4:1-3, மத். 5:23-24

 

சொந்த சரீரத்தோடு ஒப்புரவாகாமல் ஆவியில் நிரம்பி வழிந்தாலும் பிரயோஜனமில்லை. எபே. 6:11, 1பேதுரு 3:7

 

குடும்பத்தில் ஏற்ற தாழ்வுகளை களைந்து விட்டுக்கொடுத்தால்  மாத்திரமே சமாதானமும், சந்தோஷமும் நிலைக்கும்.

 

குடும்பத்தில் யார் பெரியவன்(ள்) என்று காத்திருந்தால்... பிசாசு முன்னின்று வேதத்தை உங்கள் கையில் கொடுத்து உங்கள் வீட்டில் அவனே ராஜாவாக இருப்பான். 2கொரி. 11:14-15

 

ஒருவருக்கொருவர் தாழ்மைப்படுவது அவசியம்.. ரோ. 12:16

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/bSS-KdVGrt8

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக