திங்கள், 16 ஆகஸ்ட், 2021

முறையற்ற ஞானஸ்நானம்

*முறையற்ற ஞானஸ்நானம்*

by : Eddy Joel Silsbee

 

தன்னை முழுவதுமாய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தன் *முழு சரீரத்தையும்* அடிக்கக் கொடுத்து,

முற்றும் முடிய *எல்லா ரத்தமும் சிந்தி*,

*கல்* அறையில் அடக்கப்பட்டு,

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து,

தேவன் தனக்கு ஒப்புக்கொடுத்த பொறுப்பை,

நம் எல்லாருக்காகவும் கிறிஸ்து இயேசு,

பாவ நிவாரணத்தை சிலுவையின் மூலம் ஏற்படுத்தினார்.  எபி. 9:14

 

உடம்பைக் கீறிக் கொள்ளவோ,

ஈட்டியால் வாயைக் கிழித்துக் கொள்ளவோ,

முதுகில் கொக்கி மாட்டிக்கொண்டு தேர் இழுக்கவோ,

செருப்பு இல்லாமல் பல ஊர்களுக்கு பாதயாத்திரை போகவோ சொல்லாமல்;

 

இயேசுவின் வாரத்தையைக் கேட்டு,

இருதயத்தில் முழுமையாய் விசுவாசித்து (நம்பி),

இயேசுவே தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து,

மனந்திரும்பி,

*பாவமன்னிப்பிற்கென்று* ஞானஸ்நானம் எடுக்கிறவர்களின் பாவங்களை *முழுவதும் மன்னிக்கிறேன்* என்றும்,

அவர்கள் தன்னுடைய பிள்ளையாகிறார்கள் என்றும் பிதாவாகிய தேவன் வாக்கு கொடுத்தார்.  அப். 2:37-38, யோவான் 1:12, மாற்கு 16:16

 

விசுவாசிப்பதற்கும், மனந்திரும்புவதற்கும், வாயினால் அறிக்கை செய்வதற்கும், ஞானஸ்நானம் எடுப்பதற்கும், இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுவதற்கும், எவருக்கும் காணிக்கையோ, தண்டமோ, சந்தாவோ, கட்டணமோ கொடுக்கவேண்டியதில்லை.

 

அனைத்துமே இலவசம் தான் !! வெளி. 21:6, 22:17

 

தலையை மாத்திரம் *ஓரமாக கழுவிக்கொள்வதோ*,

சபைக் கட்டிடத்தினுள் ருக்கும் பானைக்குள் *தலையை மாத்திரம் முக்கி  எடுத்துக்கொள்வதோ*, பன்னீர் தெளிப்பது போல *தெளித்து விடுவதோ* கிறிஸ்துவின் மரணத்தில் பங்கெடுக்கும் முறையல்ல.

 

கிறிஸ்துவின் மரணத்தில் முறையாக பங்கெடுக்காதவர்கள் (ஓழுங்கான/முழுமையான/முறையான ஞானஸ்நானம்) உயிர்தெழுதலிலும் கிறிஸ்துவோடு பங்கு இல்லை என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது. ரோ. 6:4-5

 

தங்கள் கொள்கைக்கான வைராக்கியத்தில் நித்திய வாழ்க்கையை தொலைத்துவிடவேண்டாம்.

 

ஞானஸ்நானம் என்பது *கேலி கூத்து அல்ல*.

Baptizo என்கிற மூல கிரேக்க வார்த்தைக்கு “முழுகுதல்” என்று அர்த்தம்.

 

*வேதத்திற்கு செவி சாய்ப்போம்*. ரோ. 6:4, அப். 8:38, தீத்து 3:5, எபே. 5:26.

 

கால தாமதம் வேண்டாம். !!

 

*இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுப்பது வேதத்தில் சொல்லப்படாத முறை*.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Qnm-mXevVjM

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக