வியாழன், 22 ஜூலை, 2021

கிறிஸ்தவர்களுக்கு Wine - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*கிறிஸ்தவர்களுக்கு Wine* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 22 July

by : Eddy Joel Silsbee

 

பரிசுத்த தேவன் தாமே நம்மை ஆசீர்வதித்து பெலப்படுத்துவாராக !

 

கிறிஸ்தவர்கள் சாராயம், பிராந்தி, பீர் குடிக்கமுடியாது ஆனால் வேதத்தில் 1தீமோ. 5:23ல் சொல்லியருப்பது போல் திராட்சைரசம் என்ற வைன் குடிக்கிலாம் என்றார் ஒருவர் !!

 

தனக்கு சாதகமாக வசனத்தை மாற்றி வெற்றி காண்பதில் மனிதகுலம் கில்லாடிகள்.

 

ஆனால், நம் கையில் இருக்கும் அதே வசனமே நம்மை நியாயம் தீர்க்கிறதாலே சரியாக நாம் புரிந்துக்கொள்ளவிடில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பலர் ஏமாந்து போவார்கள்.

 

(புளிக்காத) புதிய திராட்சை ரசம் ஏறத்தாழ 15 சரீர நன்மைகளை கொடுக்கும். ஆனால், புளிக்க வைத்து குடிப்பதோ சரீரத்திற்கு கேடு.

 

புளித்த பானம் மதுவாக இருக்கிறது. அதை பருகுவது வேதாகமத்திற்கு விரோதமானது. வசனங்களை பார்க்கவும்:

 

எபே. 5:18  துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; ...

 

1கொரி. 6:10  திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை

 

ஏசா. 5:11  சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!

 

நீதி. 23:29-32 ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.  முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

 

இன்னும் ஏராளமான வசனங்கள்.. எந்த விதத்திலும் *மதுபானம் குடிப்பது வேதத்தின்படி தவறு தான்*.

 

உபா. 14:26ல் குறிப்பட்ட வார்த்தையின் அர்த்தம் வேறு !! அந்த வசனத்தின் அர்த்தத்தை அறிந்துக் கொள்ள விரும்பினால் நம் கேள்வி பதில் குழுவில் பகிரப்பட்ட *கேள்வி எண் #390* படித்துப் பார்க்கவும்.

 

கர்த்தருடைய பந்தியிலேயே புளித்த திராட்சை ரசத்தை (wine) பயன்படுத்துபவர்கள் வேதத்தை சரியாக அறியாதவர்கள்.

அது முற்றிலும் தவறு.

 

கர்த்தரை நாடுங்கள். அவரே இரட்சிப்பார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/LfJIFcvKULU

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக