*சூழ்நிலையால் நிலைமாறக்கூடாது* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 09 July
by : Eddy Joel Silsbee
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த புதிய நாளின் வாழ்த்துக்கள்.
கஷ்டமும் நஷ்டமும் அவரவருக்கு வந்தால் தான் அவரவர் உத்தமமும் பேச்சும் எப்படி மாறுகிறது என்று அறியமுடியும்.
வாயின் உபதேசம் இலகு தான், நடைமுறைக்கு ஒத்துவராது என்ற ஒரு வழக்க சொல் உண்டு.
ஆனால்,
எங்கு போனாலும்,
எல்லா சூழ்நிலையிலும்,
அனைவர் முன்னிலையிலும்,
சாப்பிடும் போதுக்கூட குற்றப்படுத்திக்கொண்டேயிருந்த ஜனங்களுக்கு மத்தியிலும்;
இயேசுவானவர் தவறான வார்த்தை ஒன்றும் பேசாமல்,
மீறி நடக்காமல் தேவனுடைய திட்டத்தையும்,
செயலையும் நிறைவேற்றி,
சிறிய ஒரு பாவமும் செய்யாமல் வாழ்ந்து காண்பித்தவர். மத். 22:15, மாற்கு 2:16
இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த போது கூட விட்டுவைக்காத பரிகாசக்காரர்கள் போன்ற ஜனங்கள் இன்னமும் நம் வாழ்க்கையிலும் இருக்கிறார்கள் என்பதால்;
நம் சூழ்நிலையை முன்னிலைபடுத்தி,
கெட்ட வார்த்தையோ,
தவறான நடக்கையிலோ,
தேவ சித்தத்திற்கு மாறுபட்டு நில்லாமல்;
தேவனுக்கு உகந்தவர்களாக வாழ்ந்தால் மாத்திரமே பரலோகத்தில் நமக்கு இடம். மத். 27:41-43, 49.
நமக்கு முன்னோடியான இயேசுவை *அப்படியே* பின்பற்றும் பொழுது மாத்திரமே இது சாத்தியம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/zZrrPXnKRsk
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக