*ஜெப சந்தை* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 07 July
by : Eddy Joel Silsbee
எல்லா நன்மைகளையும் நமக்கு அருளும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அதீத நம்பிக்கையும், வைராக்கியமும் இப்போது அதிகமாய் இருக்கிறது.
பொய்யாக இருந்தாலும் காதால் கேட்டதில் வைராக்கியமாய் இருந்துக் கொண்டு, உண்மையை பின்னர் அறிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள பலருக்கு மனம் இடம் கொடுப்பதில்லை.
எ.கா. : மற்றவர்கள் ஜெபம் செய்யும்போது காது கொடுத்து கேட்க மனம் மறுத்து... ஜெபிப்பவர்களோடு சேர்ந்து அதே சப்தத்தில் கூடவே சேர்ந்து ஜெபிக்கும் பழக்கும் கடந்த 20/25 வருடங்களாக நுழைந்திருக்கிறது !!
மொத்தமாக எல்லோரும் சேர்ந்து அவரவர் பங்கிற்கு சப்தமாக ஒரே நேரத்தில் ஜெபிக்கும் போது, மீன் சந்தையில் நின்று அவரவர் தன்தன் வியாபார விளம்பரத்தைக் வைப்பது போல உள்ளது.
கூடியிருக்கும் அனைவரும் தன் பக்கம் தங்கள் சப்தத்தை உயர்த்திக்கொண்டிருக்க, ஜெபிக்க துவங்கியவர் எப்போது முடித்தார் என்று கூட அறியாமல் எவரும் ஆமென் போடுவதும் இல்லை.
ஒருவர் ஜெபிப்பதை மற்றவர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும்.
முடிவில் அனைவரும் ஆமென் சொல்ல வேண்டும்.
இது வேதாகமத்தின் ஒழுங்கு.. தேவதூதர்களும் ஆமென் போடுகிறார்கள்.
இந்த ஒழுக்கத்திற்கு பலர் கீழ்படிவதேயில்லை...ஆவியில் உற்சாகம் வேண்டும் என்ற பெயரில் இந்த சீர்கேடு உள்ளே நுழைந்துள்ளது.
ஆமென் சொல்லவேண்டும் என்பது கட்டளையாகவே கொடுக்கப்பட்டது. உபாகமம் 27:14-26.
உதாரணங்களை இங்கே வாசித்து பாருங்கள்.. 1 கொரி. 14:16, வெளி. 5:11-14; 7:11-12, 1நாள. 16:36, நெகே. 8:5-6
இந்த நாளை தேவன் நமக்கு சகல நன்மைகளினாலும் சமாதானத்தினாலும் ஆசீர்வதிப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக