*சமாதானத்தைப் பெறும் வழி* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 21 July
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
எவ்வளவு பணம் இருந்தாலும் கண்ணை மூடினதும் தூக்கம் வரவேண்டும் என்றால் சமாதானம் அவசியம். தூக்கமில்லை என்றால் நிம்மதி இல்லை.
நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா (வீண்); *அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்*. என்கிறார் சங்கீத ஆக்கியோன். சங். 127:2
சமாதானத்தை குலைப்பதில் வல்லவன் பிசாசு.
கணவனுக்கும் மனைவிக்கும்,
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும்,
உறவினர்களுக்குள்ளே, சபையாருக்குள்ளே, சமுதாயதிற்க்குள்ளே என்று எல்லா வகையிலும் பிரச்சனைகளைத் தூண்டுவான்.
*சுயமும் கவுரவமும் “ஒருநாளும்” உறவை சீர்படுத்தாது*. நீடிய பொறுமையும் விட்டுகொடுக்கும் மனப்பாங்கு மாத்திரமே உறவை நீட்டிக்கும்.
நான் எப்போதும் சரியானவன் என்பவர்கள் “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோ. 3:10) என்று வேதம் சொல்வதை கவனிக்கவேண்டும்.
சத்தியத்தின்படி கிறிஸ்துவை அண்டிக்கொள்ளும் எந்த ஆத்துமாவும் சமாதானம் பெறும்.
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. 2தெச. 3:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக