புதன், 14 ஜூலை, 2021

கோதுமையின் உருவத்தில் களைகள் செளிப்பாய் வளரும் - தினசரி சிந்தனைக்கான வேத...

*கோதுமையின் உருவத்தில் களைகள் செளிப்பாய் வளரும்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 14 July

by : Eddy Joel Silsbee

 

பிதாவாகிய தேவனின் நாமம் மகிமைப்படுவதாக.

 

தான் உடைத்தால் மண் குடம் மற்றவர்கள் உடைத்தால் பொன் குடம் என்பது பழமொழி.

 

ஒழுக்கம் என்ற பெயரில், குற்றம் மட்டுமே கண்களில் தெரிவது ஆபத்து.

 

ஆதிகால பரிசேயர்கள் அதை தான் செய்தனர்.

 

அன்பு என்கிற “கடமைக்கும்” அவர்கள் சட்டம் பார்த்தனர்  (லூக்கா 14:3-4).

 

10+603=613 கட்டளைகளை கவனமாக பின்பற்றுவதாக நினைத்து, *அன்பு* செலுத்துவதை விட்டு விட்டனர்.

 

அனைத்தையும் சுருக்கி இரண்டே கட்டளைகளாக கொடுத்து இயேசு கிறிஸ்து அதில் உண்மையாய் இருக்க சொன்னார். மத். 22:40

 

பரிசேயரின் பார்வைக்கு குற்றமாகப்பட்ட அனைத்தும்;

அவர்களே குற்றவாளிகளாக இயேசு கிறிஸ்துவின் பார்வையில் இருந்தனர் !! மத். 12:10-14, 15:1-9.

 

சிலுவை மரணம் வரைக்கும் இயேசு கிறிஸ்து,

நேரடியாக அவர்களிடம் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் மனந்திரும்பியதை காண்பது அரிதாகிப்போனது. !!

 

அநுபவமுள்ளவர்களையும் ஏமாற்றும் அளவிற்கு களையானது கோதுமையைப் போலவே வயலில் வளர்ந்து செளிப்பாக ஓங்கி நிற்கும்.

 

*கோதுமையின் உருவத்திலேயே அதைப்போன்றே* அதைவிட வேகமாகவும் செளிப்பாகவும் வளரும்.

 

நம்முடைய கவனமோ அப்படிப்பட்ட களைகளை பிடுங்குவதில் இருக்கவேகூடாது என்றார் நம் ஆண்டவர்.... அது நம் வேலை அல்ல !! மத். 13:28-29

 

சத்தியத்தையே பறைசாற்றுவோம்.

 

சமாதானத்தின் தேவன் நம்மை ஆளுகிறவர்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/9GqBq-c56iw

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக