திங்கள், 12 ஜூலை, 2021

முட்டாள் அதிகாரிக்கும் கீழ்படிதல் அவசியம் - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*முட்டாள் அதிகாரிக்கும் கீழ்படிதல் அவசியம்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 12 July

by : Eddy Joel Silsbee

 

பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

படித்தவனோ படிக்காதவனோ,

நம்மை விட புத்திசாலியோ அல்லது அறிவுகுறைவோ;

நம் ஸ்தானத்திற்கு மேலேயிருக்கும் நியமிக்கப்பட்ட எவ்வகை எஜமானனுக்கும் பயத்தோடு கூடிய கீழ்படிதல் அவசியம் (1பேதுரு 2:18).

 

அவர்களுக்கு கீழ்படிவது கிறிஸ்துவிற்கு கீழ்படிவதற்கு சமம். அந்தக் கீழ்படிதலில் பயமும் நடுக்கமும் இருக்கவேண்டுமாம். அதாவது, நமக்கு எவ்வித தீங்கையும் அவர்களால் தரமுடியும் என்ற பயஉணர்வும் நம்மை ஆட்கொண்டிருக்கவேண்டும். எபே. 6:5

 

பரம எஜமானனுக்கு முன்பாகவே டான்ஸூம் குரலை உயர்த்தி கெர்ஜிப்பதுமாக இருப்பவர்கள் கவனிக்கவேண்டும் !! சங். 96:9

 

நல்ல எஜமானனுக்கு மாத்திரமல்ல, முரடனானாலும், மோசமானவன் என்றாலும் நாம் கீழ்படியவேண்டும் என்று வேதம் சொல்கிறது. 1பேதுரு 2:18.

 

கீழ்படிதல் கிறிஸ்தவனுக்கு இருக்கும் அடிப்படை மற்றும் ஆதாரமான தகுதி.

 

நாம் அதை கவனமாய் பற்றிக்கொண்டு இந்த தெய்வீக கட்டளையை மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/3ERPo9Lp0pg

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக