சனி, 19 ஜூன், 2021

சோதனையிலிருந்து மேலெழும்புதல் - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 19 June

by : Eddy Joel Silsbee

 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தவறு செய்ய எல்லா வகையிலும் எப்போதும் பிசாசானவன் தூண்டிக்கொண்டே இருப்பான். விழிப்புணர்வு இல்லாமையால் சில வேலைகளில் விழுந்து போக நேரிடுகிறது.

 

விசுவசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம் (மாற்கு 16:16) ஆனால் முடிவு பரியந்தம் நிலை நின்றால் மாத்திரமே அந்த இரட்சிப்பிற்குள் பிரவேசிக்கிறோம் (மாற்கு 13:13)

 

தவறு செய்து விட்டோம் என்று உணர்த்தப்பட்டால், கூச்சப்படாமல் சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு தான் செய்த தவற்றை சொல்லி மன்னிப்பு கோரவேண்டும் என்று வேதம் கிறிஸ்தவர்களுக்கு சொல்கிறது (இரட்சிக்கப்படாதவர்களையல்ல) - யாக். 5:16 !!

 

1 முறை காட்டி கொடுத்த யூதாஸ் தவறு செய்த போது மன்னிப்பு கேட்காமல் ஜீவனை இழந்தான்.

 

3 முறை மறுதலித்ததோடல்லாமல் சபிக்கவும் செய்த பேதுரு (மாற்கு 14:71), மன்னிப்பு கேட்டதால் மேலானவராக உயர்த்தப்பட்டார்..

 

தேவன் அழைத்தவர்களை பிசாசு தொடர்ந்துக்கொண்டே தான் இருப்பான்.

 

தேவனிடத்திற்கு மனந்திரும்பி வர வேண்டும்.

நீதிமானை அவர் எழும்ப செய்வார். (நீதி. 24:16, ஏசாயா 41:9-10)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

https://youtu.be/5CU48FUcGhM

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக