வெள்ளி, 18 ஜூன், 2021

எறும்புகளின் பாடம் - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 18 June

by : Eddy Joel Silsbee

 

நம்முடைய பிதாவாகிய தேவனுடைய நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

*பாஸ்டரும் இல்லை, தலைவனும் இல்லை, சொல்லிக்கொடுப்பவனும் இல்லை,  விரிவுரையாளரும் இல்லை*..

 

ஆனாலும்,

எறும்புகள்;

தானாக ஒன்றன்பின் ஒன்று செல்லுகிறது,

தானாக வேலை செய்கிறது,

தங்களுக்குள் சண்டை போடுவதில்லை,

பொிய லாபமான ஆதாயம் கிடைத்தால் *அவரவர் தன் தன் பக்கத்துக்கு இழுக்காதபடி* ஒரே திசையில் தூக்கி செல்கிறது.

 

நீயா நானா என்று சண்டை போட்டுகொண்டு தனி தனி கூடுகளில் தனக்கு இஷ்டமான நண்பர்களை மாத்திரம் சேர்த்துக்கொண்டு வாழ்வது கிடையாது.

 

*ஒரே கூட்டில்*, எல்லாம் வாழ்கிறது,

*தன்னுடைய சேமிப்பு தனக்கு தான்* என்றில்லாதபடிக்கு பொதுவாய் சேர்க்கிறது நீதி. 6:6-8

 

மனிதர்களாகிய நமக்கோ;

அறிவு இருக்கிறது,

சபை இருக்கிறது,

ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள்,

மூப்பர்கள் இருக்கிறார்கள்,

வழிநடத்துபவர்கள் இருக்கிறார்கள்,

ஆலோசகர்கள் இருக்கிறார்கள்,

அநுதின வேலை இருக்கிறது,

சம்பாத்தியம் இருக்கிறது...

பிரச்சனை வந்தால் பிரத்யேகமாக ஆலோசனை சொல்லப்படுகிறது,

குறிப்பாக சுட்டிக்காட்டப்படுகிறது,

விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது...

 

எல்லாம் இருந்தும்;

*புத்தி வேலை செய்வது இல்லை*.

சொல்லப்படும் வார்த்தைக்கு கீழ்படிய மனம் மறுக்கிறது.

சுய மரியாதையும்,

சுய விளம்பரமும்,

சுய கவுரவத்தையும் தேடி தேடி

கிறிஸ்தவத்தையும் குடும்பத்தையும் அன்பையும் அரவணைப்பையும் தொலைப்பதை தினம் தினம் காணமுடிகிறது !! நீதி. 6:6

 

தாழ்மையும் விட்டுக்கொடுத்தலும் சகித்தலும் இல்லாஒருவன் தன்னை அன்புள்ளவன் என்று சொல்லிக்கொள்ள தகுதியில்லை என்கிறது வேதம் – 1கொரி. 13:4-8

 

சிந்திப்போம்… வீண் பெருமைகளையும், வரட்டு கவுரவத்தையும் களைந்து ஒருவருக்கொருவர் தாழ்த்தி தேவனை மகிமைப்படுத்துவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

https://youtu.be/JGpiIrHR5SI

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக