வியாழன், 17 ஜூன், 2021

நண்பனை தூஷிக்கக் கூடாது - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 17 June

by : Eddy Joel Silsbee

 

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

 

சொந்த ரத்தப் பந்தத்தைவிட சிநேகிதன் அதிக நெருக்கமானவன் (நீதி. 18:24).

 

சகோதரனிடத்தில் பகிர்ந்துகொள்ளாத விஷயத்தை கூட நண்பரிடத்தில் நாம் பகிர்ந்துகொள்கிறோம்.

 

நண்பனின் உண்மையான கருத்தும் ஆலோசனையும் வாசனை திரவியத்தை காட்டிலும் மேன்மையானது (நீதி. 27:9)

 

தீரா கஷ்டத்தில், நண்பனுக்கு உதவ மறக்கக்கூடாது (யோபு 6:14)

 

தன்னுடைய நண்பனை எப்போதும் காப்பாற்றுகிறவனாக இருக்கவேண்டுமேன்றி (1சாமு. 22:23), கருத்து வேறுபடும் போது தூற்றி திரிந்து ரகசியங்களை வெளிப்படுத்தி நண்பனை கொச்சை படுத்தி விரோதிப்பதென்பது;

தூஷிக்கிறவனின் நம்பகத்தன்மையை இழப்பது மாத்திரம் அல்ல மற்ற நண்பன் தேவனிடத்தில் முறையிடும் போது தேவனுடைய விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்கிறான் சங். 55:12-15)

 

பிடிக்கவில்லையென்றால் அமைதியாய் சிறிது காலம் ஒதுங்கி இருப்பது இருதய புண்களை ஆற்றும்.

 

தவறுகளை இரு பக்கமும் உணரும் காலமும் கிடைக்கும். நல்ல நண்பனின் சிநேகம் நமக்கு நிச்சயம் ஆறுதலை தருகிறது (பிலி. 2:20).

 

கோபமும் சுயநலமும் விரோதமும் நட்பை கெடுத்து விடும்.

 

கசப்புகளை மறந்து, நட்பு நிச்சயம் சீர்படவேண்டும். (நீதி. 27:10)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

https://youtu.be/14cR9Vwljow

 

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக