*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 9 June
by : Eddy Joel Silsbee
சர்வ வல்லவருடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒருவர் பேசுவதற்கு முன்னமே அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கணிப்பது அறிவை வெளிப்படுத்துவதல்ல மாறாக அது இழுக்கை உண்டு பண்ணும். (நீதி. 18:13)
உலகமோ, முகத்தை பார்த்து உள்ளத்தை சொல்பவர்களை ஞானி என்று சொல்கிறது !!
யாராவது நம்முடைய எதிர்காலத்தை சரியாய் சொல்வார்களா என்று ஜனம் ஆவலாய் அலைகிறது...
*சொல்வதை கேட்பதற்கு* நமக்கு பொறுமை இல்லை.
பல நேரங்களில் முழுவதுமாக படிக்கும் முன்னரே,
இது தெரிந்த வசனம் என்று கடந்து போய் விடுகிறோம்.
அதினால் அந்த வசனத்தின் முக்கியத்துவத்தை உணர மனம் மறுக்கிறது.
அங்ஙனம் வாசித்தால் செயலில் எப்படி மாற்றம் வரும்?
யாக். 1:23 ... ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் *அதின்படி செய்யாதவனானால்*, கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;
->கவனிப்பதற்கும், செவி சாய்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். கீழ்ப்படிதலும் மாறுதலும் தானாய் வரும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக