*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 14 June
by : Eddy Joel Silsbee
ஆதியும் அந்தமுமான நம்முடைய தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
எப்படியாவது தன் கணக்கில் ஒருவரை கிறிஸ்தவனாக மாற்றி விடவேண்டும் என்று முயற்சி செய்து;
ஆசீர்வாதம் உண்டு, கடன் தீரும், காலேஜ்ல வேலை கிடைக்கும், பரிசுத்த ஆவியானவர தர்றோம்,
அபிஷேகம் பெற்றுக்கொள்ளுங்கள்,
வரங்களைத் தர்றோம் என்று அப்படியும் இப்படியும் ஆசை வார்த்தைகளை கூறி மெருகேற்றி மயக்கி,
ஞானஸ்நானதிற்கு சம்மதிக்க வைக்கிறது அநேகருக்கு கை வந்தக் கலையாய் போயிற்று இக்காலங்களில்.
*ஆனால், பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும் சொல்வதே இல்லை*.
அவையெல்லாம் பிற்காலங்களில் சரியாகிவிடும், அதை ஆண்டவர் பார்த்துகொள்வார் என்று அவசரப்படுத்தி தங்கள் கணக்கில் ஒரு புகைப்படமும் எடுத்து அவர்களை தண்ணீரில் முக்கி எடுத்துவிடுகிறார்கள்.
ஐயோ பாவம்,
அந்த ஆத்துமா முன்னிலமைய காட்டிலும் பின்னிலைமையை இன்னும் மோசமாக்கி விட்டு விடுகிறார்கள். (மத். 23:15)
சுவிசேஷத்தைக் கேட்டு
இயேசுவை - கிறிஸ்து என்று விசுவாசித்து
பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி
பாவத்தை அல்ல – விசுவாசத்தை அறிக்கையிட்டு
இந்தக் குறையை ஏன் வைக்க வேண்டும் என்ற கடமைக்கு அல்ல, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளும்போது தான் இரட்சிக்கப்படுகிறோம் (மாற்கு 16:16).
அப்போது நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க நாம் தகுதியாகிறோம். தேவனுடைய பாதையில் தொடர்ந்து முடிவு பரியந்தம் நிற்கும் போது முழுமையான இரட்சிப்பைப் பெற்று பரலோகத்தை சுதந்தரிக்க தகுதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மாற்கு 13:13).
ஏறத்தாழ 100-120 வருடம் பிரசங்கித்த நோவா தன் சொந்த குடும்பத்தை மாத்திரமே ஆதாயப்படுத்திக்கொண்டார் !! அதுவே அவருக்கு பெரிய சவாலாக இருந்திருக்குமோ ??
விதைக்க வேண்டியதும் நீர் பாய்ச்ச வேண்டியதும் நம் வேலை. வளரச்செய்வது தேவனுடையது.
வசனத்தை கலப்படம் இல்லாமல் விதைப்போம். பலனை எதிர்பாராமல் விதைப்போம்.
பலன் நிச்சயமாய் வரும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக