#1103 - *ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலியிட கொடுக்கும் போது, ஈசாக்கிற்கு எத்தனை வயது*?
*பதில்* : நேரடியான எந்த குறிப்பையும் வேதத்தில் காணமுடியாது. ஆனால், ஈசாக்கின் வயதை அநுமானிக்கக்கூடிய சில தகவல்கள் உண்டு.
1-சாராளின் 90வது வயதில் ஈசாக்கு கருவில் உருவாகியிருந்தார். அப்போது ஆபிரகாமுக்கு 99 வயது (ஆதி. 17: 1, 17).
2-ஈசாக்கின் பலி சம்பவத்திற்கு பின்னரே சாராள் தனது 127வது வயதில் மரிக்கிறார் (ஆதி. 23:1).
3-சாராள் மரிக்கும் போது ஈசாக்கிற்கு 37வயது.
4-நானும் பிள்ளையாண்டானும் என்று ஆதி. 22:5 & 12ஆம் வசனங்களில் ஈசாக்கைக் குறித்து சொல்லப்படும் *பிள்ளையாண்டான்* என்ற வார்த்தையானது எபிரேயத்தில் "நாஹார்" என்றுள்ளது. இந்த நாஹார் என்ற அதே எபிரேய வார்த்தையை யோசேப்பின் 17ஆம் வயதிலும் மற்றும் 30வது வயதிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. (ஆதி. 37:2, 41:12, 46)
5-பலி செலுத்த புறப்பட்ட போது, அந்த பிரயாணத்தில், தாயின் உதவியில்லாமல் ஈசாக்கு தன் தகப்பனாருடன் 3 நாட்கள் பயணம் செய்ய போதுமான வயதுள்ளவர் என்பதால் குழந்தையல்ல என்பதை அநுமானிக்க முடியும்.
6-பலியிடுவதற்கான விறகுகளை மலையின் மேல் ஈசாக்கு தானே கொண்டு சென்றார் (ஆதி. 22:6).
7-பலியிடுவதற்கு ஆடு எங்கே என்று ஈசாக்கு கேட்பதை வைத்து ஈசாக்கு, விபரம் அறிந்த பிள்ளை என்று தெளிவாக அறியமுடியும். ஆதி. 22:7
ஆகவே, மேற்கூறிய இந்த நிகழ்வுகளின் அடிப்படையில், பலி செலுத்தும் சம்பவத்தின் போது, ஈசாக்கு சிறு குழந்தையாக இருக்கவில்லை என்பதை நாம் அறியமுடியும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
சனி, 5 ஜூன், 2021
#1103 - ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலியிட கொடுக்கும் போது, ஈசாக்கிற்கு எத்தனை வயது?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக