*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 25 May 2021
by : Eddy Joel Silsbee
கிருபையுள்ள தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
மனிதன் வளர வளர,
அறிவும் வளர்கிறது.
*அறிவோடு சேர்ந்து, சுய நம்பிக்கையும்* அதீதமாகிறது..
சுயநம்பிக்கை கூடினதால்,
வெளிக்காரியங்களில் கட்டுப்பாட்டோடு இருப்பதில் கவனம் குறைகிறது.
(2 சாமுவேல் 11ம் அதிகாரம்)
அடுத்தவனின் மனைவி என்றும்(வ3),
விசாரிப்பது சுயநலம் என்றும் (வ7),
ஆலோசனை கொடுப்பதில் நயவஞ்சகம் என்றும்(வ8),
உபசாரம் அனுப்புவது சுயவெறி என்றும் (வ8),
மற்றவனை மகிழ்விப்பதில் சுயலாபம் என்றும்(வ13),
அவன் சுயநலமற்ற உத்தம போர்வீரன் என்று அறிந்தும் (வ11),
கொலை செய்யும்படி அவன் கையிலேயே தன் படைத்தளபதிக்கு கடிதம் கொடுத்து அனுப்புவது (வ15),
*தாவீது இராஜாவின் சுயம்* என்னும் குணநலம் வளர்ந்து,
நன்மையை மறைத்து, தீமையை விளைவித்தது. 2சாமு. 11:1-15
ஆம்... சுய கர்வமும்,
சுய சிந்தனையும்,
சுய நம்பிக்கையும்,
தான் நினைத்தது சகலமும் சரி என்ற எண்ணமும் வளர்ந்ததால்...
முடிவில் தீங்கே தளைத்து.
மேலும் –
பக்கத்துக்கு வீட்டில் நடந்ததோ அதிலும் மிச்சம்,
இராஜாவின் அரண்மனை இருக்கிறது என்றும்,
அவர், *மொட்டைமாடியில் வெளியே உலாவுவார் என்று அறிந்தும், பத்சேபாள் வெளியரங்கமாக குளித்திருக்கிறாள்*. 2சாமு.11:2
தனக்கு நடந்ததை,
சொந்த கணவனிடம் முறையிடாமல்,
கள்ளக்காதலனுக்கு செய்தி அனுப்புகிறாள் பத்சேபாள். 2சாமு. 11:5
செய்தியை அறிந்த தாவீது, கர்ப்பமான காரணத்தை அந்தக் கணவன் மீது சுமத்த எடுத்த முயற்சி தோற்றுப்போனதால், அவனைக் கொலை செய்ய வேண்டியதாயிற்று. 2 சாமு. 11:6, 8, 12, 14-15
தொலைதொடர்பு, அலங்காரம், விஞ்ஞான வளர்ச்சி, உடை நாகரிகம், பேசுவதில் வளமை, தாலந்துகளில் முன்னேற்றம் என்கிற சகல வளர்ச்சியும் நமக்கு நன்மையாகவும், தேவனுக்கு சாட்சியாகவும் வளர்ந்து முற்பட முயற்சிக்காமல்,
அந்த நாகரீகமே நம்மை அழிக்க இடம் கொடுக்கக் கூடாது.
நித்திய ஜீவனுக்கு நேரான நம்முடைய பிரயாணத்தில் *சகலவிதமான ஒழுக்கமும், இச்சை அடக்கமும் பொறுமையோடும், பக்தியோடும், நிதானத்தோடும் தொடருவோம்* (1கொரி. 9:25)
தேவன் தாமே நம்மை பாதுகாத்து வழிநடத்தி ஆசீர்வதிப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக