வியாழன், 20 மே, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 20 May 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 20 May 2021

by : Eddy Joel Silsbee

 

அனுதினமும் நம்மோடு இடைபடும் வார்த்தையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஆவியானவர் வெளிபடுத்தினார்,

ஆவியானவர் பேசினார்,

ஆவியானவர் சொன்னார் என்று சொல்லப்படும் கூற்றுகளை ஆர்வத்தோடும் பக்தியோடும் கேட்கிறோம்.

 

*இயேசு கிறிஸ்து சொன்னவைகளை*,

நாம் படித்து தேறும்படியாக,

அப்போஸ்தலர்கள் அவைகளை சரியாக, நேர்த்தியாக எழுதிவைக்க *அவர்களுக்கு* தேவ ஆவியானவர் கொடுக்கப்பட்டு இயேசு சொன்னவைகளை *நினைப்பூட்டுவார்* என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. யோ. 14:26

 

ஒழுங்காக வேதத்தை வாசித்தும்,

எழுதப்பட்டவைகள் நினைபூட்டபட்டாலும்,

நமக்கு இருக்கும் துன்பத்தினால்,

சில வேளைகளில் ஜெபிக்க கூட முடியாமல் விக்கி நிற்கும் போது, அவரே (ஆவியானவர்) *நமக்காக பிதாவினிடத்தில் வேண்டுதலும்* செய்கிறார். ரோமர் 8:26.

 

“வேதத்தில் எழுதப்பட்டிராததை ஆவியானவர் பேசினார் என்று சபையாரிடம் கண்ணீரோடும் உணர்ச்சிபூர்வமாகவும் சொந்த கற்பனைகளை சொல்லும்போது ஆக்கினையை வருவித்துக்கொள்கிறார்கள். யாக். 3:1

 

தேர்ச்சி பெற விரும்புகிற,

வளரும் ஊழியாக்காரருக்கு *பிரசங்கிப்பதில் எப்படி வளரலாம்* என்று தேவனால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலமான, கைதேர்ந்த,  மூத்த ஊழியக்காரர் கொடுக்கும் ஆலோசனையின் “வளர்ச்சிப் படிகளை வாசித்து பாருங்கள்” ...   1-> ...  2-> ... 3->  1தீமோ. 4:13

 

*கடைசி படியை, முதலில் துவங்கி விடகூடாது*

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக