புதன், 19 மே, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 19 May 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 19 May 2021

by : Eddy Joel Silsbee

 

சத்தியத்தின் தேவன் தாமே மகிமைப்படுவாராக.

 

எந்த சின்ன விஷயத்திற்கும் “சத்தியமா சொல்றேன்னு” தன்னுடைய வாதத்தை *சத்தியம்* பண்ணி உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

 

ஒரே நேரத்தில் பல வேலைகளை ஈடுபடுத்திக்கொள்வதன் விளைவினால், ஒருவர் சொல்வதை கவனிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் கவனம் போதுவதில்லை.

 

பிரசங்க நேரத்தில் “கவனியுங்கள்” என்று முக்கியப்படுத்தி சொன்னால் தான் அந்தக்குறிப்பை கவனிக்க துவங்குகிறார்கள் !!

 

முழு தேவ செய்தியை  எவ்வாறு கவனிக்கிறார்களோ?

யார் எதை பேசினாலும் முதலாவது கவனிக்க வேண்டும்,

புரிந்து கொள்ள வேண்டும்,

சொல்பவரின் முதிர்ச்சியையும், பிரபல்யத்தையும், தலை நரையையும் கணக்கிட்டு அவர் கூற்றுக்களை அப்படியே ஏற்றுக்கொள்வது ஆபத்து.

அதன் உண்மை தன்மையை வேதத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கீழ்படிய வேண்டும்.

 

சத்தியம் செய்து தன் காரியத்தை வலியுறுத்தக் கூடாது என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் (மத். 5:34).

 

என்ன விளைவுகள் வந்தாலும் உண்மையை மாத்திரமே எப்போதும் சொல்ல தீர்மானிப்போம்.

 

சொன்னதை நிறைவேற்ற தவற வேண்டாம்.

 

சொன்ன வார்த்தையை நிறைவேற்ற தவறுகிறவன் தன் ஸ்தானத்தை இழக்கிறான். யாக். 3:2

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக