*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இனிய நாள் வாழ்த்துக்கள்.
தேவாலயத்திற்கு போன சீஷர்கள் திரும்பும் போது அங்கு சொல்லப்பட்ட போதனையோ,
பாடின பாடல்களோ,
நடந்த தொழுகை முறைமைகளோ மனதில் முதன்மையாக வைக்காமல்,
கட்டிடத்தைக்குறித்து,
இந்தக் கல், அந்தக் கல் என்று *கட்டிடத்தின் அழகை* விமரிசித்துக்கொண்டு இருந்தனர் (மாற்கு13:1)
புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கும் நாம்,
*எந்தக் கட்டிடத்திலும் தேவன் வசிப்பது இல்லை* என்று அறியவேண்டும்.
நாம் தான் ஆலயம்.
கூடும் இடமோ வெறுமனே ஆராதனைக் கூடம் அல்லது ஒரு வளாகம் மாத்திரமே.
தேவனுக்கு உகந்த கீழ்படிதலினால் தொழுகை அலங்கரிக்காமல்,
கட்டிடத்தின் அழகையும்,
பலவிதக் கருவிகளினாலும்,
ஸ்பீக்கர் பாக்ஸ்களினாலும்,
அலங்கரித்துவிட்டனர் இந்தக் கால *கிறிஸ்தவ மதத்தினர்*.
உண்மையான ஆலயத்தை விட்டு உயிரற்ற கல்லுகளால் ஆன கட்டிடத்தை வணங்க கூடாது.
*கிறிஸ்தவ மதத்தை விட்டு, கிறிஸ்தவ மார்க்கத்தை படித்து, கற்றுக்கொள்ள முற்பட்டால், கிறிஸ்துவின் வருகையில் நாம் சேர்த்துக்கொள்ளப்பட ஏதுவாகும்*.
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோ. 13:11
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+968 93215440
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக