*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
ஆராதனைக்கு பாத்திரரான ஒரே தேவனாகிய நம் பரம பிதாவிற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
எபி. 10:25 படிக்கும் போதெல்லாம், சபை கூடிவருதல் என்பதை மாத்திரம் கவனமாக பார்த்து கடந்து விடுகிறோமோ என்ற அச்சம் உள்ளது. அதிலுள்ள இரண்டாவது பகுதியையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.
(வசனம் எபி. 10:25 - சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; *நாளானது சமீபித்து வருகிறதை* எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும்)
மேலேயுள்ள பார்த்த வசனத்தின் இரண்டாவது பகுதி –
இன்னும் 7 நாள் இருக்கே,
இன்னும் 6 நாள் இருக்கே,
இன்னும் 5 நாள் இருக்கே..
இன்னும் 4 நாள் இருக்கே.. என்று நாள் நெருங்க நெருங்க கர்த்தருடைய நாளுக்காக (நாளானது சமீபித்து வருகிறதை) எதிர்நோக்கி ஆவலோடு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும்..
தொழுகைக்கு வாருங்கள் என்று நினைவுப்படுத்த வேண்டிய பரிதாப நிலையில் கிறிஸ்தவ வாழ்க்கை இன்னமும் உள்ளது சிலருக்கு… கடைசி நேரத்தில் ஒரு வேலை வந்துவிட்டது ஆகவே, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று பலர் சாக்கு சொல்வதும் பெருகிவிட்டது. ஊழியரை கனப்படுத்த அல்ல, கூடுவது… தேவாதி தேவன் நம் வாழ்க்கையில் செய்த நன்மைக்காக, கொடுத்த ஜீவனுக்காக நன்றி செலுத்தவும் கூடுகிறோம் என்பதை மறக்ககூடாது !!
கர்த்தருடைய நாளில் தேவனை ஆராதிக்க தவற வேண்டாம். நமக்காக கிறிஸ்து காயப்பட்டு முழு இரத்தத்தையும் சிந்தி உயிரையும் கொடுத்தார். இரட்சிப்பை இலவசமாக வழங்கினார். நமக்கோ, இரண்டு மணி நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு பிஸி !!
ஒரு தீவிர தேவை வந்துவிட்டாலோ, வலி வந்தாலோ, நேர் முழங்காலில் நின்று ஜெபிக்க நேரம் உடனே வந்துவிடுமே ..
வாரத்தின் முதல் நாளில், அவரை தொழுது கொள்ள மடித்து - ஏதாவது சாக்கு போக்கு காரணங்களை சொல்லி வீட்டில் முடங்கி கிடந்தால்:
நாம் ஏறெடுக்கும் ஜெபத்தை தானும் பிஸி என்று தவிர்த்துவிட்டால் என்னவாகும்?
உற்சாகமாக வாரத்தின் முதல் நாளில் தேவனை தொழுது கொள்ள கூடுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக