தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee
சகல நன்மையினாலும் கிருபையினாலும் நம்மை நடத்துகிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
துப்பாக்கி வெடித்து அருகாமையில் நின்றவர்கள் பலியானதை பார்த்த போதும்,
மயிரிழையில் ஒதுங்கி போன வாகனத்தின் இரைச்சலிலும்,
உறங்கும் போது மாறி மாறி விழுந்த இடியை அனுபவித்தவர்களுக்கு, ”ஆபத்து நேரத்தில் அடைக்கலம்” என்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தம் புரியும்.
உடலில் உள்ள நடுக்கமும்,
வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தை நாமே உணரும்போது;
மறைந்துக் கொள்ள ஒரு பாதுகாவலான இடமோ,
வயது முதிர்ந்த ஒருவரது அணைப்போ ஆறுதலைத் தரும்.
இராஜாவாக இருந்த போதும், ஏராளமான படைகள் இருந்த போதும் தாவீது இராஜா, தேவனை தன் அடைக்கலம், அரண் என்றிருந்தார்.
தன் காலமுழுதும் போர் புரிந்தாலும், வெற்றி கிடைத்த காரணம், கர்த்தரை மாத்திரமே சார்ந்து இருந்ததன் பலன்.
நம்முடைய சகல சூழ்நிலைகளிலும்,
சகல நேரங்களிலும்,
தேவனே நமக்கு அடைக்கலமும்,
பெலனும்,
ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
ஆகவே, பூமியே தன்னிலை மாறினாலும்,
நடுச்சமுத்திரத்தில் ஏதுமின்றி தத்தளித்துக்கொண்டிருக்கும் போது கண்ணில் கிடைத்த ஒரு குன்றில் தஞ்சம் புகுந்து சாவதானமாய் இருந்த போது அந்த மலையும் சாய்ந்துபோனாலும்,
நிற்ககூடமுடியாமல் நம்மை சுற்றி ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கினாலும்,
நின்று கொண்டிருக்கும் தளம் அதிர்ந்து அசைந்தாலும், சர்வ வல்ல தேவனை நாம் அண்டியிருக்கிறோம் என்பதால் அச்சம் வேண்டாம்.. சங் 46:1-3
சகலமும் நன்மைக்கே !!
இன்று கர்த்தருடைய நாள்.
தேவனைத் தொழுதுக் கொண்டு, நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் மரணத்தை நினைவுகூறும் கடமை நமக்கு உள்ளது.
Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக