தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee
உன்னதமான தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
நான்காயிரம் ஆண்டிற்கு முன்னரே, நீதியான அரசர் என்று பேர்பெற்ற சாலொமோன் ராஜா காலத்தில், பூமியிலே நடக்கும் நீதிமன்றங்களில் அநீதி இருப்பதையும், நியாயஸ்தலத்தில் அநியாயமும் இருப்பதை தெரிவிக்கிறார். பிரசங்கி 3:16
குற்றவாளி என்று அறிந்தும் வக்கீலாக இருக்கும் போது தன் வாதத்திறனால், அவன் கொடுக்கும் பணத்திற்காக, அவனை நிரபராதியாக்கி தண்டனையிலிருந்து விடுதலைபெற செய்யும் திறன் உள்ளவர்கள், "அந்த" அனுபவத்தில் வளர்ந்து, உயர்ந்து, பதவி உயர்வு கிடைத்து, நீதிபதியாக நியமிக்கப்பட்டால், நியாயமும் நீதியும் தளைத்தோங்கும் என்று உலகம் நம்புகிறது !!
வாதத்திறமையும், புத்தி கூர்மையும் பூமியில் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி ஒரு கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கின பின்பும், பல படங்கள் உலகமே அறியும்படி பிரசுரிக்கபட்டாலும், சாட்சியில்லாமல் போகலாம்.
ஆனால், பரலோக நீதிமன்றத்தில் விளக்கமோ, காரணமோ, சாட்சியோ, விவாதமோ நமக்கு வாய்ப்புகளே கொடுக்கப்படாது – அன்று நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படும் !! 1பேது 4:5, சங் 9:7-8
ஆகவே, சுவாசம் இருக்கும் போதே, அதற்கேற்றபடி உத்தமாய் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பிலி 2:15-16
கையிலேயே எப்போதும் வைத்திருக்கும், நன்கு புரியும்படியாக சொந்த மொழியில் அச்சிடப்பட்ட பரலோக நீதிமன்றத்தின் சட்டப்புத்தகமான வேதாகமத்தில் உள்ள நடைமுறை சட்டத்தின்படி (புதிய ஏற்பாட்டு சத்தியத்தின்படி) நம் தொழுகை முறையையும், ஞானஸ்நானம் எதற்காக எடுத்துக்கொண்டீர்கள் (அப் 2216) என்பதையும், வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு பார்ப்பது நமக்கு கொடுக்கப்பட்ட பொற்கால அவகாசம் !! 1தெச 5:23,
அப்பொழுது நிச்சயம் நமக்கான உன்னத தீர்ப்பு வாசிக்கப்படும் போது, அவை நமக்கு சாதகமாக வரும் !! ரோ 2:2, 1 கொரி 11:31
நாம் தைரியங்கொண்டு திடமனதாய் வாழமுடியும். 1யோ 3:21-22
Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
வியாழன், 15 அக்டோபர், 2020
தினசரி சிந்தனைக்கான வேத துளி - 15 Oct 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக