*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த எல்லா வேளைகளிலும் ஜனங்களோடு இணைந்தே இருந்தார்.
ஜெபிக்கும் வேளையை தவிர,
எத்தனையோ எதிர்ப்புகளும், எதிரிகளும் இருந்த போதும் கூட,
ஜனங்களிடத்தில் இருந்து தன்னை தனிமை படுத்திக்கொள்ளவில்லை.
உயிர்தெழுந்த நாள் துவங்கி பரலோகத்திற்கு ஏறி போகும் நாள் வரைக்கும் தன்னுடைய சீஷருக்கு மாத்திரம் அல்லாமல் இன்னும் அநேகருக்கு தன்னை வெளிபடுத்தினார்.
உயிர்தெழுந்த பின் அவரை பார்த்த ஜனங்களின் பட்டியல் கீழே:
*மகதலேனா மரியாள் – யோ 20:14-16
*யாக்கோபுவின் தாயான மரியாள், சலோமி & யோவன்னாள் (லூ 24:10, மத் 28:1)
*பேதுரு - லூக்கா 24:34
*எம்மாவூருக்கு போய்க்கொண்டிருந்த இரண்டு சீஷர்கள். லூக்கா 24:13-16
*பத்து சீஷர்கள் (தோமா இல்லை) - யோ 20:19,20,24
*தோமா உட்பட மற்ற சீஷர்கள். யோ 20:26-28.
*கலிலேயா கடற்கரையில் ஏழு சீஷர்கள். – யோ 20:1-2
*கலிலேயா மலையில் தன்னுடைய 11 சீஷர்கள். மத்28:16-17
*ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள். 1கொரி15:6
*இனத்தானாகிய யாக்கோபு. 1கொரி15:7
*சவுலாகிய (அப்) பவுல் அப்9:3-5
மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்த நம் ஆண்டவராகிய உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து, மறைமுகமாக தன்னுடைய சீஷருக்கு மாத்திரம் காட்சி கொடுத்தார் என்று சொல்வதற்கு இடம் இல்லாமல் அநேகருக்கு தன்னை வெளிபடுத்தினார்.
மரித்தபின் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறவர் - அவர் ஒருவரே.
பரலோகத்திற்கு ஏறிப்போனவரே அல்லாமல் வேறு எவரும் நம்மை பரலோகம் அழைத்து செல்ல வழியறியாதவர்கள் !! எபே 4:8-10
ஆகவே, அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்து முழுவதுமாய் அற்பணிப்போம்.
நம்மை அவர் மாத்திரமே ஆசீர்வதிக்க முடியும்.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக