ஞாயிறு, 4 அக்டோபர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 04 Oct 2020

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

ஆறுதலின் தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

ஜீவனுள்ள தேவனை நாம் தொழுது கொள்கிறோம்.
அவர் நம்மை காண்கிறவர்.
நம் ஜெபத்தை கேட்கிறவர்.
நம் சூழ்நிலையை உணர்கிறவர். (யாத்திராகமம் 3:7)

நம் ஜெபம் கேட்கப்பட மணி அடிக்கவோ, கைகளை தட்டவோ, மேளத்தை முழங்கவோ வேண்டியதில்லை! ஏசா 1:15

கைகளை தட்டிக்கொண்டே ஜெபிக்கும் பழக்கம் கிறிஸ்தவர் மத்தியில் எங்கேயிருந்து வந்தது? யார் நுழைத்தது? பரிசுத்த வேதாகமத்தில் எங்கேயும் சொல்லப்படாத , அனுமதியில்லாததை, அங்கீகரிக்காததை,? கட்டளையிடாததை, அவர் முன்னிலையிலேயே ஆராதனையில் கடைபிடித்தால் தேவன் செவி சாயப்பாரோ?

விளக்கேற்றுவதற்கான அக்கினியானாலும், (லேவி 10:1-2, யாத் 30:9)
மலை அடிவாரமானாலும், (எண் 20:11-12, 20:8)
தள்ளாடின பெட்டியானாலும், (2சாமு 6:6-7)
தொழுகையின் அங்கீகரிப்பானாலும் (2நாளா 26:18-19)
சுயப்பிரியத்தை நுழைத்தவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்தனர் !!

நம் ஜீவனுள்ள தேவன் எந்த காலத்திலும் உறங்குவதுமில்லை.
அவரை தட்டி எழுப்பலாம் என்று முயற்சி செய்ய அவசியமில்லை.

அந்நிய ஆராதனைக்காரர்களின் முறைமைகளை கைக்கொள்ள வேண்டாம் என்று தீர்கதரிசிகள் சொல்லி சொல்லி மடுத்து போனார்கள்.. யார் செவி சாய்ப்பது? உபா 18:9

மாம்ச பரவசமும், மாம்சீக உற்சாகமும் “பரிசுத்தம்” என்ற எண்ணத்தைக் கைவிட்டு ஜீவனுள்ள தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ளவேண்டும்.

சத்தியத்திற்கு கீழ்படிதலே அத்தியாவசியம்.

இன்று கர்த்தருடைய நாள். தேவாதி தேவனை தொழுது கொண்டு கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறுவோம்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக