*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
என்றென்றும் வாக்கு மாறாத தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பிறனுடன் எப்போதும் மெய்யை பேசவேண்டும் என்று வேதம் சொல்கிறது. எபே 4:25, சகரி 8:16
தன் பொய்யான கொள்கையை வலியுறுத்துவதற்காக ஜனங்களை திசை திருப்பி *மெய்யை சொல்லாமல் விட்டு விடுகிறார்கள்*. நீதி 12:17
மற்றவரின் வறுமையையும், வியாதியையும், கஷ்டத்தையும், இயலாமையையும் தனக்கு சாதகமாக்கி சுய லாபம் ஈட்டும் கிரேத்தாவின் ஜனங்கள் நம் மத்தியில் பல வேஷத்தில் பெருகியிருப்பது கவனிக்க வேண்டியதே.. தீத்து 1:12
தன்னை பின்பற்ற வேண்டுமானால் அவனவன் சுயத்தை வெறுத்து தன் சொந்த சிலுவையை (வேதனைகள் / அவமானங்களை) சுமக்க சொன்னார் இயேசு... இவர்களோ சிலுவை போன்ற ஒரு சின்னத்தை தங்கத்திலும் வெள்ளியிலும் ஓலையிலும் மரத்திலும் கற்களிலும் செய்து அதை விற்று லாபம் காண்கிறார்கள் !! மத் 10:38, மத் 16:24,
தங்கள் மந்தையை கரவலாடுகளாகவும் பால் கறக்கும் பசுக்களாகவும் நடத்தாமல் பசும்புல்லை அவை மேய்ந்து கொள்ளும்படி ஆடுகளுக்கு முன்னதாக நடக்க வேண்டியது அவசியம்.1பேது 5:2-3
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு தேவன் நன்மையை வழங்காதிரார்.. சங் 84:11
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
(புதிய 8ம் குழு - மற்றவை அனைத்தும் நிறைந்துள்ளது)
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
செவ்வாய், 15 செப்டம்பர், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 15 Sep 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக