வியாழன், 10 செப்டம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 10 Sep 2020

 தினசரி சிந்தனைக்கான வேத துளி
By : Eddy Joel Silsbee

அன்பின் தேவன் தாமே நம்மை தொடர்ந்து வழி நடத்துவாராக.

யோசுவாவும் காலேபையும் தவிர மற்ற ஒற்றர்களுக்கு தங்கள் பெலத்தை விட அத்தேசத்தார் பலசாலிகள், இராட்சதர்கள் என்று பயந்தார்கள். தன்னோடு இருக்கும் தேவனின் மகிமையை உணராமல் அங்கு இருப்பவர்களை கண்டு பயந்ததின் நிமித்தம் பல வருடங்கள் வனாந்திரத்திலேயே சுற்ற வேண்டி இருந்தது.. எண் 13:33.

போதாக்குறைக்கு, அதைக் கேட்ட ஜனங்களும், வல்லமையாய் இது வரை நடத்தின தேவனுடைய செயலை மறந்து அதே அடிமைத்தனத்திற்குள் திரும்பி செல்லலாம் என்று திட்டம் தீட்டினார்கள். எண் 14:1-4

நம்மோடு இருக்கும் தேவன் மகா பெரியவர் என்பதை மறந்தால் பயம் நம்மை தொற்றிக் கொள்ளும்.

கர்த்தருக்கு பிரியமாக நடப்பதில் கவனமாக மாத்திரம் இருந்தால் – சகலத்தையும் அவர் தன் சித்தப்படி வாய்க்கச்செய்வார். எண் 14:8-9

நமக்கு எதிராக யார் எப்படி வந்தால் என்ன? எண் 14:10

நம் உறவு தேவனிடத்தில் நெருக்கமாய் இருந்தால் – சிங்கம் போல வலம் வரலாம். நீதி 28:1

அவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம். பூரண சமாதானம் நம்மை எப்போதும் ஆண்டு கொள்ளும். பாதுகாப்பும் அடைக்கலமுமான இடம் அவரே. ஏசா 26:3-4

Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக