புதன், 9 செப்டம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 09 Sep 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

பிதாவாகிய தேவனும் குமாரனாகிய கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் நம்மில் இன்னும் பெலப்படுவதாக.

 

கிறிஸ்தவர்களோ கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோ – அனைவருமே நிச்சயமாய் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை பார்க்க தான் போகிறோம். 1 கொரி 15:22

 

ஒருவேளை நாம் கிறிஸ்துவின் வருகைக்கு முன்னர் மரித்துப் போனாலும் *அவர் வரும் பொழுது நிச்சயமாக* அவரைப் பார்ப்போம்.. 1தெச 4:16, 1கொரி 15:51-52, வெளி 1:7, மத் 24:30, 2கொரி 5:10

 

ஆகவே,

இரகசியமாக அவர் வந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மாத்திரம் கூட்டி கொண்டு தனியாக ஒரு அரசாங்கம் அமைக்கவோ  நாமெல்லாரும் அமைச்சர்களாகவோ போர் வீரர்களாகவோ ஆயிரம் வருஷம் ஒரு தொந்தரவும் இல்லாமல் வாழும் காலம் வரப்போகிறது என்ற அதீத கற்பனையை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

 

ஆயிரம் வருட அரசாட்சியை குறித்து முழுமையான துல்லியமான வேத விளக்கங்களை நம் கேள்வி பதில் குழுவில் பகிரப்பட்ட கேள்வி எண் #320ஐ படிக்கவும்.

 

இயேசு கிறிஸ்து வரும் போது இந்த உலகம் அழிக்கப்படும். 2பேது 3:10

 

அனைவரையும் நியாயத்தீர்ப்பில் நிறுத்துவார். வெளி 20:13, எபி 9:27

 

அவருடைய கட்டளைக்கு கீழ்படிகிற நாம் பரலோகதிற்கும்;  கீழ்படியாத அனைவரும் நரகத்திற்கும் போவது உறுதி.  2தெச 1:7

 

அவர் பூமிக்கு ராஜாவாக வேண்டும் என்று முயற்சி செய்கிறவராக இருந்தால் கிறிஸ்து சிலுவையில் அறையப்படாதபடி அவர் சீஷர்கள் அப்பொழுதே சண்டை போட்டிருப்பார்கள். யோ 18:36

 

ரோம சாம்ராஜ்யத்தை முற்றிலுமாய் அழிப்பதற்கு ஒரு க்ஷனப்பொழுது போதுமே !! ஒரு தூதன் இறங்கி வரவேண்டிய அவசியமே இருந்திருக்காது !! ஆதி 19:24

 

கிறிஸ்துவின் கட்டளைக்கு மாத்திரம் கீழ்படிவோம்.

 

கற்பனைகளை களைந்து நடைமுறையில் உள்ள வேதகட்டளைக்கு மாத்திரம் செவி சாய்ப்போம்.

 

அவர் வருகைக்கு தயாராவோம்!!

 

ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நாம் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருப்போம்.  ஆண்டவரே சீக்கிரம் வாரும். 2பேது 3:12-14

 

இந்த நாளும் ஆசீர்வாதத்தில் நிறையட்டும்.

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக