தினசரி சிந்தனைக்கான வேத துளி
By : Eddy Joel Silsbee
நமக்காய் எப்போதும் பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பி பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்களை நினைக்கும் போதெல்லாம் தேவனை துதிக்கும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். பிலி 1:6
அவ்வாறே, கொலோசே பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒழுக்கத்திலும், கிறிஸ்துவின் விசுவாசத்தில் உறுதியாகவும் இருப்பதை அப். பவுல் கண்டு சந்தோஷப்படுகிறார். கொலோ 2:5
மேலும், தெசலோனிக்கே பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் நம்பிக்கையும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியன் கிரீடமாகவும் இருப்பதை தெரிவிக்கிறார். 1தெச 2:19-20.
பிலேமோனின் அன்பும் அரவணைப்பும் பரிசுத்தவான்கள் இளைப்பாறவும் ஆறுதலடையவும் அவரின் அன்பை அறிந்து புரிந்து கொள்ள ஏதுவாயிருந்தது. பிலே 1:7
பிதாவாகிய தேவனும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம் மீது வைத்த மற்றும் வெளிப்படுத்தின அன்பை சொல்லி தெரியவேண்டுமோ? யோ 3:15-17
ஏதோ நாம் வாழ்கிறோம், வேலைக்கு போகிறோம், சம்பாதிக்கிறோம் என்றில்லாமல் - மற்றவர்கள் நம்மை குறித்து நினைக்கும் போது அவர்கள் நமக்காக தேவனை துதிக்கும் அளவிற்கு நாம் இருக்கிறோமா?
நன்மையினாலும், உபசரிப்பினாலும், உதவிகளாலும், ஆதரவினாலும், நம் கிரியை நிறைந்து இருக்கும் போது அது நிச்சயம் சாத்தியப்படும்.
நம்மை யார் நினைத்தாலும் நமக்காக அவர்கள், தேவனை துதிக்கவும், ஸ்தோத்தரிக்கவும் இப்படிப்பட்ட நல்ல காரியங்கள் நம்மில் வளரட்டும். 2 கொரி 2:8, 8:24, கொலோ 3:14
Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M
செவ்வாய், 8 செப்டம்பர், 2020
தினசரி சிந்தனைக்கான வேத துளி 08 Sep 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக