வியாழன், 10 அக்டோபர், 2019

#552 - யாகம் என்று ஏசாயா 34:6ல் வருவதைக்குறித்து விளக்கவும்.

#552 - *யாகம் என்று ஏசாயா 34:6ல் வருவதைக்குறித்து விளக்கவும்*.

*பதில்*
தமிழ் வேதாகமத்தில் நானறிந்து 4 வசனங்களில் இந்த *யாகம்* என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

1)
ஏசாயா 34:6 - போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு *யாகமும்*, ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது;

2)
எரே 46:10 ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு *யாகமும்* உண்டு.

3)
எசே 39:17 மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் *யாகமாகிய மகா யாகத்துக்குச்* சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.

4)
எசே 19:19 நான் உங்களுக்காகச் செய்யும் *யாகத்திலே* நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.


எபிரேய வார்த்தையை ஆராயும் போது எவ்வளவு ஞானமாக மொழிபெயர்க்கப்பட்டு சரியான வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் என்று இதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

சிறிய ஒலி வித்தியாசத்தில் 2 வகையான வார்த்தைகள் உள்ளன.


1) ஸா-பக் (Zabach)

கீழே உள்ள வார்த்தைகள் இந்த எபிரேய வார்த்தைக்கான அர்த்தம் :

1. பலியிடுவதற்காக கொல்லுதல்
2. பலியிடுதல்
3. பலிகொடுக்க வெட்டுதல்
4. உண்பதற்காக வெட்டுதல்
5. தெய்வீக நியாயத்திற்காக கொல்லுதல்

இந்த ஸா-பக் என்ற வார்த்தையை வேதாகமத்தில் 134 முறை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.


2) ஸெ-பக் (Zebach)

கீழே உள்ள வார்த்தைகள் இந்த எபிரேய வார்த்தைக்கான அர்த்தம் :

1. நீதியின் பலிகள்
2. சண்டையின் தியாகங்கள்
3. சண்டையின் போது ஏற்பட்ட பலிகள்
4. *இறந்தவர்களுக்கான பலிகள்*
5. உடன்படிக்கைக்கான பலிகள்
6. பஸ்கா பலிகள்
7. வருட பலிகள்
8. நன்றி பலிகள்
9. மிருக பலிகள்

இந்த ஸெ-பக் என்ற வார்த்தையை வேதாகமத்தில் 162 முறை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழில் யாகம் என்கிற வார்த்தையை விக்கிரக வழிபாட்டோடு நாம் சேர்த்தே கேட்டு பழகியிருக்கிறோம்.

யாகம் என்கிற வார்த்தையை புறஜாதியாரோடு பேசும் போது உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும் (எரே 46:1, எசே 39:21 மற்றும் பழிவாங்கும் இடத்தில் வரும் பலிகளை யாகம் என்று ஏசா 34:8ல் பார்க்கிறோம்)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக