திங்கள், 2 செப்டம்பர், 2019

#415 - காவலிலுள்ள ஆவிகளுக்கு கிறிஸ்து பாதாளத்தில் போய் பிரசங்கித்தாரா? இறந்துப்போனபின் மனம் திரும்புதல் சாத்தியமா?

#415 - *காவலிலுள்ள ஆவிகளுக்கு கிறிஸ்து பாதாளத்தில் போய் பிரசங்கித்தாரா இறந்துப்போனபின் மனம் திரும்புதல் சாத்தியமா?* அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் என்று 1 பேதுரு 3:19  உள்ளதே?

இந்த வசனத்தின்படி மறைந்தபின் மனம் திரும்புதல் சாத்தியமா?
இதில் உள்ள மறைபொருளை விளக்கவும்.
 
*பதில்* :
இயேசு பாதாளத்தில் சென்று பிரசங்கித்தார் என்றே பரவலாக ஜனங்கள் கேட்டு வருகிறார்கள். இதனிமித்தம் மரணமடைந்த பிறகு நாம் மனந்திரும்பி வாழலாம் என்று பலருக்கு எண்ணம் !! 
 
இந்த கேள்வியைக் கேட்ட சகோதரருக்கு என் வாழ்த்துக்கள். 
நிச்சயமாக இந்த பதிவு அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பேதுரு அப்போஸ்தலன் கூறுகிறார், “அந்த” (அதாவது, அவருடைய ஆவியால்), கிறிஸ்து சென்று நோவாவின் நாட்களில் கீழ்ப்படியாத “சிறையில் உள்ள ஆவிகளுக்கு” பிரசங்கித்தார் என்று (1பேதுரு 3:18)

அவரது உடல் கல்லறையில் இருந்த மூன்று நாட்களில், சிறைபிடிக்கப்பட்டவர்களின் ஆவி உலகத்திற்கு இயேசு சென்றார் என்று இந்த வசனத்தின் மூலம் சிலர் சொல்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் நோவாவின் வெள்ளக் காலத்தில் கீழ்படியாதவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் கிறிஸ்துவானவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் என்பதே.

*எப்படி இது சாத்தியம்*?
பின்வரும் காரணங்களை கவனிக்கவும்.

ஒருவர் இந்த பூமியை விட்டு வெளியேறிய பிறகு, அவருக்கு இரட்சிப்பின் திட்டம் எதுவும் இல்லை. ஏனென்றால் மரணத்தைத் தொடர்ந்து, தீர்ப்பு வருகிறது என்று வேதம் தெளிவாகக் கற்பிக்கிறது (எபிரெயர் 9:27).

ஒரு நபர் மரிக்கும் போது எந்த அளவில் இருந்தாரோ (இரட்சிக்கப்பட்டோ / இரட்சிக்கப்படாமலோ) அதற்கேற்ற பலனை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நியாயதீர்ப்பில் பெற்றுக்கொள்வர் (மத்தேயு 25: 1-12).

மரணத்திற்கு பின் மீட்பிற்கு இரண்டாவது வாய்ப்பு உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு எந்த வாய்ப்புமே இல்லை என்று வேதாகமம் திட்டவட்டமாக சொல்கிறது.

ஐஸ்வரியவான் மற்றும் லாசரு பற்றிய சம்பவத்தில் கிறிஸ்துவின் வாக்கை நாம் கவனித்தால் தீயவர்கள் தள்ளப்பட்டிருக்கும் இடத்திற்கும் நல்லவர்கள் இருக்கும் இடத்திற்கும் யாரும் போகமுடியாத வண்ணம் ஒரு பெரிய இடைவெளி உள்ளது என்று பார்க்கிறோம். (லூக்கா 16:26).

*அப்படியானால், 1 பேதுரு 3:18 என்ன கற்பிக்கிறது*?
நோவாவின் நாட்களில், இயேசு கிறிஸ்து, “[அவருடைய] ஆவியில்” (மாம்சத்தில் அல்ல), தேவனின் சத்தியத்தை பேரழிவிற்கு முந்தைய தலைமுறைக்கு அறிவித்தார் என்பதை வசனம் உறுதிப்படுத்துகிறது.

*கர்த்தர் அதை எப்படி செய்தார்*?
அவர் நீதியின் போதகரான நோவா மூலமாக செயல்பட்டார் (2 பேதுரு 2: 5).

இதே நிருபத்தில் பேதுரு “கிறிஸ்துவின் ஆவியானவர்” பழைய ஏற்பாட்டு காலத்தில் வெளிப்பட்டதையும் குறிப்பிடுவதை கவனிக்கவும். (1பேதுரு 1:10-11)

1பேதுரு 1:11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.

1 பேதுரு 3:18 ஐ பொருத்த வரை – நாம் கவனிக்க வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால் கிறிஸ்து, நோவாவின் மூலம், அந்த கீழ்படியாத மக்களுக்கு பிரசங்கித்தபோது, அவர்கள் உயிருடன் இருந்தார்கள், பூமியில் இருந்தார்கள். ஆனால் பேதுரு தனது நிருபத்தை எழுதிய காலத்தில், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார்கள், அவர்களுடைய ஆவிகள் நரக சிறைச்சாலையில் அவதிப்பட்டு வந்தன என்பதை சுட்டிக்காட்டுகிறது.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
 
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக