*பதில்* :
தேவனிடத்தில் தொழுகைக்கென்று சேரும் போது – அவர் சொல்படி
செயல் பட வேண்டியது அவசியம்.
பேச சொன்னால் “பேச தான்” வேண்டும் – பழைய ஞாபகத்தில்
அடித்துவிட்டால், அது மோசேயானாலும் – கானானுக்குள் தேவன்
அனுமதிக்க மாட்டார். (எண். 20:8, 11-12, யாத். 17:6)
அவருக்கு ஏறத்தாழ 6 லட்சம் புருஷர்களை காட்டிலும் இரண்டே
இரண்டு கீழ்படிதலுள்ள யோசுவாவும் காலேபையும்
தெரிந்தெடுத்தவர். (எண். 32:11-12, எண். 1:19, 2:32)
ஆசாரியனுடைய பிள்ளைகளானாலும் சொல்லாததை செய்தபோது (அந்நிய அக்கினியை கொண்டுவந்ததால்)
கொன்றே போட்டார். (லேவி. 10:1-2)
அப்பேர்பட்ட கடுமையான நியாயபிரமானத்திலிருந்து மீட்டு
கிருபையின் சட்டத்தில் நம்மை கொண்டு வந்த தேவனுக்கு நாம் இன்னும் எவ்வளவு
பயந்திருக்க வேண்டும்?
*சாதாரண ஒரு மேனேஜர் அறைக்குள் போகும் போது நீங்கள் காட்டும்
பவ்யம் தேவனுக்கு முன்பாக ஏன் வருவதில்லை?*
பயத்தோடும் நடுக்கத்தோடும் நாம் இருக்க வேண்டும். (சங்.
2:11)
சந்தோஷத்துடன் அவர் சந்நிதியில் வரவேண்டும் என்றால் இஷ்டத்திற்கு
ஆடிக்கொண்டே அவர் சமூகத்தில் நிற்க யார் அதிகாரம் கொடுத்தது?
எனக்கு முன்பாக நடுங்குகிறவனையே நோக்கி பார்ப்பேன்
என்கிறார் தேவன் (ஏசா. 66:2)
கிறிஸ்தவர்கள் எப்படி பாட வேண்டும் என்று புதிய ஏற்பாடு நமக்கு
தெளிவாய் கற்றுக் கொடுத்திருக்கிறது (#322ஐ பார்க்கவும்).
பாடல் பாடும் போது கைதட்டிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது புது
ட்ரென்டாக – ஐயப்ப பக்தர்கள் செய்வது போல தாங்கள் ஜெபிக்கும் போதும் கைதட்டிக்கொண்டே
ஜெபிக்கிறார்கள் !! *பயம் போய் துணிகரம்
வந்து விட்டது*.
முதலாளியிடம் போய் ஒரு விண்ணப்பத்தை கேட்கும் போது நேராக
நிற்காமல் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே அல்லது கைதட்டிக்கொண்டே கேட்டால்
என்னவாகும்?
இவ்வளவு ஒழுங்கீனமாக பரம தேவனிடத்தின் சமூகத்தில் நடந்து கொள்ளும்படி
எந்த வசனம் நமக்கு போதிக்கிறது? வேதனைக்குறிய விஷயம்.
இந்த பதிவை பார்த்ததும் பலருக்கு சுருக்கென்று கோபம் வரும்.
குழுவை விட்டு வெளியேறிவிடலாம் என்று தோன்றும்.
*வசனத்திற்கு நாம் செவி சாய்ப்பது அவசியம்*.
சொந்த மந்தையையும் / பாஸ்டர்களையும் ரெவரென்டுகளையும்
பிரியப்படுத்தாமல் – தேவனை பிரியப்படுத்த வேண்டும். தேவனுடைய ஆசீர்வாதத்தின் பலனை
அப்போது புரிந்து கொள்வீர்கள்.
*சில ஆதார வசனங்கள் கீழே:*
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள்
மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும்,
அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும்,
கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய்
வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ? – எரே. 5:22
ஜாதிகளின் ராஜாவே,
உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்?
தேவரீருக்கே பயப்படவேண்டியது;
ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும்,
அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. எரே. 10:7
உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான
நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த
நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால், கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும்
உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து, நீ கண்டு பயந்த
எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள்
உன்னைப் பற்றிக்கொள்ளும். உபா. 28:58-60
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். சங். 119:120
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
மத் 10:28, லூக்கா 12:5
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும்
இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். வெளி. 15:4
இன்னும் ஏராளமான வசனங்கள் உண்டு
!!!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக