ஆதியாகமம் 1 அதிகாரம் 26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும்
மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள்
சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப்
பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப்
பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 27. தேவன்
தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத்
தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும்
பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
மேற்கண்ட வசனங்களில் சில சந்தேகங்கள் உள்ளது
அது என்னவெனில்
1. நமது
சாயலாகவும்
2. ரூபத்தின்படியேயும்
3. தம்முடைய
சாயலாக
கிறிஸ்துவின் சபை சாராத சிலர் இவ்வார்த்தைகளை மேற்கோள்
காட்டி தேவனுக்கு ரூபம் உள்ளதென்றும் மனிதனைப்போல் அவருக்கும் உருவம்
உண்டு என்றும் சாதிக்கிறார்கள். உண்மையில் ரூபம்,தேவசாயல்
என்பதை எந்த அடிப்படையில் புரிந்துகொள்ளவேண்டும்? அதற்கான அர்த்தம் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் அவர்களுக்கு பதில் கூற
விளக்கம் தருமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன்.
*பதில் :*
* சாயல் என்கிற வார்த்தைக்கு – மூல எபிரேய பாஷையில் - TSELEM என்றும்,
* ரூபம் என்கிற வார்த்தைக்கு – மூல எபிரேய பாஷையில் – DEMOOTH என்றும் வருகிறது. இந்த வார்த்தை இரண்டிற்கும் – அர்த்தம் resemblance;
concretely model, shape; adverbially like: - fashion, like, manner,
similitude என்று அர்த்தம். அதாவது,
அவரை போல, அச்சு அசலாக.. அதாவது – உறுப்புகள் ஒத்து
இருக்கத்தக்கதாக... அப்படியே என்கிற அர்த்தம்.
ஒரு மிருகத்தை போலவோ, பறவையை போலவோ,
உருவமற்ற போர்வையை போலவோ, காற்றை போலவோ, தண்ணீரை போலவோ இல்லாமல், தேவனும் நம்மை போல கண்,
காது, மூக்கு, கை, கால்கள் உள்ளவர் என்று அறிய முடிகிறது. வெளிப்புற தோற்றத்தை குறிக்கிறது.
மனிதர்கள் மண்ணினால் உருவாக்கப்பட்டதால், சரீரத்தை பேணுவதற்கு – நமக்கு ஆகாரம் அவசியப்படுகிறது. தேவன் ஆவியாய்
இருப்பதால் – அவர் நம்மை போல ஆகாரம் உட்கொள்ள அவசியப்படுவதில்லை.
*வேறு ஆதார வசனங்கள் :*
*ஆதி. 5:1 ... தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத்
தேவசாயலாக உண்டாக்கினார்.
*1கொரி. 11:7 புருஷனானவன்
தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால்...
*ஆதி. 9:6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால்...
தேவன் ஆவியாய் இருக்கிறார். அவருக்கு சரீரம் இல்லை.
அவருக்கு நிச்சயமாக நம்மை போல அழிவுள்ள சரீரத்தையோ, தீய எண்ணத்தையோ, நமக்கு இருக்கும் தீய சிந்தையினாலோ
இல்லாதவர். (பிரசங்கி 7:29 இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்;
அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்...) என்று
பார்க்கிறோம்..
கிறிஸ்துவுக்குள் நாம் வரும்போது புது சிருஷ்டியாக்கப்படுகிறோம்
/ அல்லது மாறும் போது – தேவனுடைய ரூபத்திற்கு ஒப்பாக மாற வேண்டியது
அவசியப்படுகிறது.
*கொலோ. 3:10 தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப்
பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
*எபே. 4:24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும்
தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள் – என்று
வாசிக்கிறோம்.
தாயைப்
போல பிள்ளை நூலைப்போல சேலை என்ற தமிழ் பழமொழி உண்டு.
தேவ
சாயலாக மனிதனை தேவன் உருவாக்கினார் என்று வேதம் சொல்கிறது - ஆதி. 5:1
மனுஷன்
செம்மையானவனாக உருவாக்கப்பட்டான் – பிர. 7:29
தேவ
சாயலை கண்டு கொள்ளாமல் இருக்க பிசாசு மனிதனின் மனதை குருடாக்கினான் என்கிறார்
பவுல் - 2கொரி. 4:4
மெய்யான
நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான் என்று
எபேசியருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடுகிறார் – எபே
4:24
விழுந்து
போனவர்கள் / மனதை கெடுத்துக்கொண்டவர்கள் மீண்டும் தேவ சாயலைப்பெற கிறிஸ்துவை சேர
வேண்டும் – கொலோ. 3:10
சாயல்
என்பது – தேவனுடைய பரிசுத்தமான எண்ணங்களை குறிக்கிறது.
ரூபம்
என்பது – இமேஜ் என்று சொல்லப்படும் அமைப்பை குறிக்கிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக