#1252 - *வேதாகமத்தின்படி வயதில் மூத்தவர்களை அப்பா என்று கூப்பிடலாமா?*
*பதில்* : வேதாகமத்தின்படி வயதில் மூத்தவர்களை “அப்பா” என்று அழைப்பது தவறு என்று சொல்ல முடியாது.
மத்தேயு 23:9-ல் இயேசு, “பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்” என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த வசனத்தை மட்டும் வைத்து யாரையும் அப்பா என்று அழைக்கக்கூடாது என்று முடிவு செய்ய முடியாது. அதன் சூழலையும் பார்க்க வேண்டும்.
மத்தேயு 23:5–12-ல், மனிதர்களால் காணப்படுவதற்காகச் செயல்படுதல், உயர்ந்த இடங்களையும் பட்டங்களையும் விரும்புதல், மனிதர்களிடமிருந்து மதிப்பையும் மேன்மையையும் எதிர்பார்த்தல் ஆகியவற்றை இயேசு கண்டிக்கிறார்.
எனவே, மத்தேயு 23:9-ன் முக்கியமான நோக்கம், மனிதர்களை இறைவனுக்கு இணையான அதிகாரமுள்ளவர்களாக உயர்த்தி, அவர்களுக்கு ஆவிக்குரிய மேன்மையையும் இறுதி அதிகாரத்தையும் வழங்கக்கூடாது என்பதாகும்.
2 இராஜாக்கள் 2:12-ல் எலிசா, எலியாவை “என் தகப்பனே” என்று அழைக்கிறார். அதேபோல், 1 கொரிந்தியர் 4:15-ல் பவுல், கொரிந்திய விசுவாசிகளைச் சுவிசேஷத்தினால் பெற்றதால் அவர்களுக்குத் தகப்பனாக இருப்பதாகக் கூறுகிறார்.
மேலும், 1 தீமோத்தேயு 5:1-ல் முதிர்வயதுள்ளவர்களைத் தகப்பனைப் போல நடத்த வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
எனவே, வயதில் மூத்தவர்களை மரியாதைக்காக “அப்பா” என்று அழைப்பது தவறு என்று வேதாகமம் சொல்லவில்லை. ஆனால் ஒரு மனிதனை தேவனுக்கு இணையாக உயர்த்துவதைத்தான் நாம் தவிர்க்க வேண்டும்.
முக்கியமானது நாம் ஒருவரை என்ன பெயர் சொல்லி அழைக்கிறோம் என்பதுமட்டுமல்ல; அவருக்கு நாம் கொடுக்கும் இடமும் மரியாதையும் என்ன என்பதுதான்.
என்னைப் பொறுத்தவரை – சரீரப்பிரகாரமாய் என்னை பெற்றெடுத்த தகப்பனையும், இப்பூமியில் நம்மை பிறக்க செய்த தேவனையும் தவிர வேறு எவரையும் “அப்பா” என்று அழைக்க விரும்பமாட்டேன். அந்த வார்த்தைக்கு அவ்வளவு கனம் உள்ளது. அதை வீணாக்க நான் நினைப்பதில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:* https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
-------------------------*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக