வியாழன், 24 பிப்ரவரி, 2022

வீழ்ந்த இடத்திலேயே ஜெயக்கொடியை நாட்டுவோம்

*வீழ்ந்த இடத்திலேயே ஜெயக்கொடியை நாட்டுவோம்*

by : Eddy Joel Silsbee

 

இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள தேவனுக்கே சகல துதியும் கமும் உண்டாவதாக.

 

அரசாங்கத்தில் ஒரு மனு கொடுத்தால் ஆவன செய்கிறேன் என்று வாங்கி கிடப்பில் சில நேரம் போட்டு விடுவார்கள். மனுவை தொடர்ந்து போட்டு நொந்தே போய் விடும் அனுபவமும் பலருக்கு இருக்கும்.

 

ஆனால், நாம் வைக்கும் எந்த ஜெபமும் கேட்கபடாமல் பதில் வர தாமதித்தால், நமது ஜெபம் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று அர்த்தம் இல்லை.

 

தேவனிடமிருந்த பதில் வர தாமதிக்கலாம்.

நாம் எதிர்பார்த்து அவரிடம் வைத்த காலக்கெடு அல்லது நாம் குறித்த நேரமல்ல, *தேவனுடைய நேரத்திற்காக* நாம் காத்திருக்க வேண்டும்.

 

பரம பிதா ஒருபோதும் நம்மை கீழாக்க மாட்டார்.

 

ஒரு நேரத்தை கணக்கிட்டு அப்போஸ்தலர் கிறிஸ்துவினிடத்தில் கேட்டபோது அவரது பதிலைக் கவனிக்கவும்:

 

அப். 1:6-7 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: *பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல*.

 

மேலும், அடுத்த வசனத்திலேயே அவரது பதிலில் இன்னுமொரு வாக்குறுதியையும் கவனிக்க தவறவேண்டாம்:

அப். 1:8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

 

ஆம், அவரது பதிலில் உள்ள ஓர் ஆச்சரியம்… எந்த இடத்தில் தலை குனிந்ததோ, அங்கிருந்தே பயணத்தை தொடர செய்யும் அளவிற்கு வல்லமை உள்ளவர்.

 

தலைநகரமான எருசலேமில் அடங்கி ஒடுங்கி பயந்து வீட்டிற்குள் கிடந்தனர். அப். 8:1, யோ. 20:10, மாற்கு 14:50

 

தங்கள் நாடான யூதேயாவில் யூத ஜனங்களின் எதிர்ப்பும் அதிகாரிகளின் சூழ்ச்சியும் இருந்தது. அப். 19:23

 

விரோதி நாடான சமாரியாவில் யூதர்கள் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு எதிர்ப்புகள் இருந்தது. லூக்கா 9:52-54

 

ஆனால், அனைத்தையும் தவிடுபொடியாக்கும் அளவிற்கு அவர்களது பிற்கால வாழ்க்கை அமைந்து அதிகாரிகளையும், ஜனங்களையும், தேசத்தையும், உலகத்தையுமே கலக்கினார்கள் !! அப். 17:6; 4:8-10, 18-20

 

தேவனுடைய சித்தத்திற்குட்பட்டு நாம் ஏறெடுக்கும் ஜெபம் ஏற்றவேளையில் நமக்கு பதில் கிடைக்கும்வரைக்கும் விசுவாசத்தோடு காத்திருக்கவேண்டும். யாக். 4:3, 15

 

சங். 103:13  தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/SW7nTGPLFY0

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக