சனி, 1 ஜனவரி, 2022

தேவ ஆசீர்வாதம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

*தேவ ஆசீர்வாதம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்*

by : Eddy Joel Silsbee

 

உன்னதங்களில் வாசம் செய்து நம்மில் அதிசயங்களை நடப்பிக்கிற உன்னதமான தேவனுக்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

புதிய வருஷத்தை காண கிருபை செய்த தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள்.

 

ஆசீர்வாதமான புதிய ஆண்டினை தேவன் தாமே நமக்கு வாய்க்கச் செய்வாராக.

 

*நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்* 2 கொரி 9:8.

 

வாழ்வில் உயர்வோ தாழ்வோ *மனத்தாழ்மையை விட்டு விடாதிருங்கள்*.

 

புதிய உற்சாகத்திலும் புதிய அன்பிலும் பெருக தேவன் கிருபை பாராட்டுவாராக.

 

புதிய தீர்மானங்களை எடுங்கள். அதில் நிலை கொள்ளுங்கள்.  எடுத்துக்காட்டாக சிலவற்றை பட்டியலிட்டுள்ளேன் குறைந்தது 3 தீர்மானங்களை எடுக்கலாம்.

 

குறைந்தது 10 வசனமாகிலும் மொபைலில் அல்ல *வேதாகமத்தை திறந்து* தினம் படிக்க.

 

குறைந்தது 10 நபர்களுக்காகவாவது குறித்து வைத்து தினசரி ஜெபிக்க.

 

நாம் அறியாத ஜனத்தில் இருக்கும் 1 குழந்தைக்கு படிப்பு செலவு செய்ய.

 

அவ்வப்போது ஜெபித்து கொண்டே வாழ்வது ஒருபக்கம் இருக்க, தினம் ஜெபிக்கும் நேரத்தை தீர்மானித்து, கடை பிடிக்க.

 

படுக்கைக்கு போகுமுன்னர் பிறர் மீது இருக்கும் கோபத்தை மன்னித்து, இனி நினையாமல் இருக்க.

 

இரட்சிக்கபடாத குறைந்தது 3பெயரை குறித்து வைத்து அவர்களுக்காக ஜெபிக்க.

 

கஷ்டத்தின் மத்தியில்,

உத்தமமாய் நடக்கும் ஏதாவதொரு ஊழியத்தின் பாரத்தில் பங்கெடுங்கள்.

 

ஒருவரையும் குறை கூறாமல் இருக்க.

 

ஒருவரையும் கிண்டல் பேசாமல் இருக்க

 

சபை ஊழியத்தில் ஏதாவதொன்றில் பங்கெடுக்க.

 

இப்படி சில தீர்மானங்களை எடுக்கலாம்.

 

தேவன் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

 

 

*********  எபிரெயர் 12:12-13  *********

 

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/bNy5F4NKQ_A

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக