*பிரசங்கத்திலும் தேவனே நிறைந்திருக்கவேண்டும்*
By : Eddy Joel Silsbee
ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எத்தனை நாடுகள் சுற்றி இருக்கிறேன்;
எத்தனை ஆயிர ஜனங்கள் தனது கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்;
எத்தனை ஊர்களில் தெருவெல்லாம் போஸ்டர் ஒட்டினார்கள்;
தான் ஜெபித்தால் எத்தனை பேர் குணமடைந்து சாட்சி சொன்னார்கள்;
தான் எத்தனை அற்புதங்கள் நடத்தி காண்பித்தேன்;
எப்படியோ வாழ்ந்த நான் இப்பொழுது இவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் என்று;
”*தன் துதி பாடி*”,
கதை சொல்லி,
ஊர் பாட்டு பாடி,
பழமொழிகள் பேசி,
ஜோக் அடித்து,
இடையிடையே சம்பந்தமேயில்லாமல் ”அல்லேலூயா என்றும் ஸோத்ரம் என்றும் சொல்லி”,
ஒரு மணி நேர பிரசங்கத்தில் ”*வெகு சில வசனத்தை*” கோடிட்டு காண்பித்து விட்டு, ஆசீர்வதித்து, ஆமென் என்று மூன்று தடவை சொல்லி முடித்துவிடுவது - தேவச்செய்தி என்று இக்கால பிரசங்க மேடை பேச்சாளரின் ஸ்டைலாக மாறிப்போனது !!
வசனத்தின் விளக்கமோ, சத்தியத்தை போதிக்கவோ, வேதாகம இரகசியங்களின் உட்கருத்துக்களோ, ஜனங்களின் அன்றாட வாழ்வில் வசனத்தின் இன்றியமையாமையை எப்படி தாங்கி செல்வது என்றோ வலைப் போட்டு தேடினாலும் கிடைப்பது அரிதாயிருக்கிறது !!
வாலிபரும் கண்ணிகையரும் *தாகத்தோடு வீடு திரும்புகிறார்கள்* !!
... கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.
... கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள். ஆமோஸ் 8:11-13
ஊருக்கு உபதேசம் என்னும் தொழில் சொந்த வயிற்றை நிரப்ப உதவலாம்.. ஆனால், சொந்த ஆத்துமாவையும் இழக்க நேரிடும்.
வசனத்தை படிப்பதோடும், கேட்பதோடும், சொல்வதோடும், மனனம் செய்வதோடும் நில்லாமல் அதை சொந்த வாழ்க்கையில் முதலாவது நாம் நடைமுறைபடுத்துவோம் கீழ்படிவோம் செவிசாய்ப்போம்…. தேவ ஆசீர்வாதம் தானாய் வரும் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/bD8WNgjFblg
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக