வியாழன், 16 டிசம்பர், 2021

#1121 - பழைய உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கைக்கான வித்தியாசத்தை பட்டியலிடமுடியுமா?

#1121 - *பழைய உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கைக்கான வித்தியாசத்தை பட்டியலிடமுடியுமா? இக்காலங்களில் மிக அதிகமாக நியாயபிரமாணத்தை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறதே அது சரியா? விளக்கவும்*.

*பதில்* : இக்காலங்களில் மாத்திரமல்ல கிறிஸ்துவின் வருகை வரை இத்தகைய ஜனங்கள் இருப்பார்கள். அவர்கள் இன்னும் மேலோங்கி செழிப்பாய் வளர்வார்கள் என்று உவமையில் தெளிவாய் கிறிஸ்து சொல்லியிருக்கிறார். மத். 13:27-29

நியாயபிரமாணத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதம் சொல்கிறதே !!  கலா. 3:10, யாக். 2:10

ஆகவே, நியாயபிரமாணம் வேண்டும் என்று சொல்பவர்கள் தங்களை மாத்திரமல்ல, தங்களது போதனையை கேட்கும் அனைவரையும் சாபத்திற்கும் நரகத்திற்குள்ளும் தள்ள முயற்சிக்கிறார்கள்.

தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். 1தீமோ. 1:7

இவர்கள் மாத்திரமல்ல, இயேசுகிறிஸ்துவை கொலை செய்ததும், ஸ்தேவானைக் கொலை செய்ததும், அப்போஸ்தலர்களைக் கொலை செய்ததும் இதே காரணங்களுக்காகத் தானே… மாற்கு 14:57, யோ. 2:18-21, அப். 6:14; 14:2

நியாயபிரமாணம் என்பது இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்த சட்டமானது அவர்களுக்கே 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக காலாவதியான போது, வேடிக்கை என்னவென்றால் சம்பந்தமே இல்லாதவர்களும் மாம்சத்தின்படி லேவியருமல்லாதவர்களுமான இந்த ஜனங்கள் நியாயபிரமாணத்திற்கு முட்டுக்கொடுப்பது அறிவீனத்தின் உச்சம். ரோ. 10:4, கொலோ. 2:14-15.

பகையாய் நின்ற சுவரை தனது மரணத்தினால் எடுத்துப்போட்ட இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையே தவறு என்று சொல்ல இந்த சுயபரிசுத்தவான்கள் முற்படுவது எவ்வளவு பெரிய ஆக்கினைக்குள்ளாவார்கள் என்பதை அறியாமல் பேசுகிறார்கள். விரைவில் தங்கள் தவறை உணர்ந்து புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன். எபே. 2:15-16

நீங்கள் கேட்டவற்றை கீழே நான் பட்டியலிடுகிறேன்.

இப்பதிவை வேதாகமத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் எவரது மனமும் நியாயபிரமாணத்தை கைவிட்டு கிறிஸ்துவின் விசுவாசத்திற்குள் வருவார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பு : ப.ஏ என்றால் பழைய ஏற்பாடு மற்றும் பு.ஏ என்றால் புதிய ஏற்பாடு என்றும் கீழ்வரும் குறில் பதங்களை புரிந்துக் கொள்ளவும்.

ப.ஏ : பழைய உடன்படிக்கை. 2கொரி. 3:14
பு.ஏ : புதிய உடன்படிக்கை. 2கொரி. 3:6

ப.ஏ : மோசேயினால் கொடுக்கப்பட்டது. யோ. 1:17
பு.ஏ : கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்டது. எபி. 1:1-4

ப.ஏ : இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. உபா. 5:1-3
பு.ஏ : அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. மத். 28:18-20

ப.ஏ : கற்பலகைகளில் எழுதப்பட்டது. 2கொரி. 3:7
பு.ஏ : இருதயத்தில் எழுதப்பட்டது. 2கொரி. 3:3

ப.ஏ : வருங்காரியத்தின் நிழலாயிருந்தது. எபி. 10:1
பு.ஏ : வரவேண்டிய உண்மையானது இதுவே. எபி. 8:1-2

ப.ஏ : காளை மற்றும் வெள்ளாட்டுக்களின் இரத்தம் பயன்படுத்தப்பட்டது. எபி. 10:4
பு.ஏ : கிறிஸ்துவின் இரத்தம் பயன்படுத்தப்பட்டது. எபி. 9:14

ப.ஏ : பலிகளுக்கு மரித்த மிருகங்கள் பயன்பட்டது. எபி. 10:1-4
பு.ஏ : ஜீவனுள்ள சரீரங்கள் பலியாக பயன்படுகிறது. ரோ. 12:1-2

ப.ஏ : வருடந்தோரும் பாவங்கள் நினைவுபடுத்தப்படுகிறது. எபி. 10:3
பு.ஏ : பாவங்கள் நினைக்கப்படுகிறதில்லை. எபி. 8:12

ப.ஏ : ஒரேவித பலிகள் அநேகந்தரம் செலுத்தப்பட்டது. எபி. 10:11
பு.ஏ : கிறிஸ்து தனது பலியை ஒரேதரம் செலுத்தினார். எபி. 10:12

ப.ஏ : ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை. எபி. 7:19
பு.ஏ : கிறிஸ்துவுக்கும் பரிபூரணப்படுத்தப்படுகிறது. கொலோ. 2:10

ப.ஏ : மாம்சத்தில் விருத்தசேதனம். ஆதி. 17:9-11
பு.ஏ : இருதயத்தில் விருத்தசேதனம். ரோ. 2:29

ப.ஏ : ஆக்கினைத்தீர்ப்பு கொடுக்கும் ஊழியம். 2கொரி. 3:9
பு.ஏ : நீதியை அளிக்கும் ஊழியம். 2கொரி. 3:9

ப.ஏ : லேவியரில் ஆசாரியத்துவம். எபி. 7:11
பு.ஏ : ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆசாரியர். 1பேதுரு 2:5

ப.ஏ : பிழையில்லாததுதல்ல. எபி. 8:7
பு.ஏ : பூரண பிரமாணம். யாக். 1:25

ப.ஏ : அடிமைத்தன நுகம். கலா. 5:1-4
பு.ஏ : சுயாதீனப்பிரமாணம். யாக். 1:25

ப.ஏ : ஒருவனும் நீதிமானவதில்லை. கலா. 3:11
பு.ஏ : விசுவாசிக்கிறவர் நீதிமானாக்கப்படுகிறார். கலா. 3:24

ப.ஏ : ஒழிந்து போனது. 2கொரி. 3:13
பு.ஏ : நிலைத்திருக்கிறது. 2கொரி. 3:11

இத்தனையையும் அறிந்த பின்னரும் தனக்கு நியாயபிரமாணமே அவசியம் என்றால் குறிப்பாக நான் எனது இரண்டு கைகளையும் தூக்கி வானத்திற்கு நேராக அப். 20:27ஆம் வசனத்தை தாராளமாக பிரகடனப்படுத்துகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*    
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக