*கச்சேரியான ஆராதனைகள்*
By : Eddy Joel Silsbee
நாம் பயப்படும்படிக்கு தன்னிடம் மன்னிப்பை வைத்திருக்கும் உன்னதமான தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வேத ஒழுங்கின்படி ஆராதனை கூடத்தில் அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் (கண்காணிகள்), போதகர்கள், ஊழியர்கள், உதவிக்காரர்கள், மற்றும் சபையார் இருப்பதை வேதத்தில் பார்க்கிறோம்.
தொழில் செய்யும் கம்பெனிகளில் தொழிலாளர்களுக்கு மேல் மேலாளர்கள், நிர்வாகிகள், கண்காணிகள் என்று பல பதவிகள் இருப்பது போன்று சபையிலும் உள்ளது என்று நினைத்து விடக்கூடாது. சபையில் கிடைப்பது பதவிகள் அல்ல அவை பொறுப்புகள்.
கர்த்தர் என்றால் ஆண்டவர், அதிகாரி, எஜமானன், அதிகாரம் படைத்தவர் என்று பொருள். ஆதி. 24:14
மேலான அதிகாரமும், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் படைத்தவர் இராஜாதி இராஜாவாகிய இயேசு கிறிஸ்து. மத். 28:18
இரண்டுக்கு மேற்பட்ட நபர் அவருடைய கட்டளைப்படி *எந்த இடத்தில் கூடும் போது*, நம்மில் வாசமாயிருக்கும் தேவனானவர் மத்தியில் உலாவுகிறார். யாக். 4:5, மத். 18:20
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், பிதாவாகிய தேவனை தொழுதுக்கொள்ளும்படி கூடுகிறதாயிருந்தால் நம் மத்தியில் இப்பேர்பட்ட மேலானதும் சகல அதிகாரமும் படைத்த தேவன் இருப்பேன் என்றல்ல மாறாக *இருக்கிறேன்* என்கிறார். மத். 18:20
இருக்கிறேன் என்பது நிகழ் காலம் !!
நண்பர்களாக கூடி ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று ஒரு முதியவர் வந்துவிட்டால் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தி அவர் சொன்னதும் உட்கார்ந்து அமைதியாய் பேசுவது மரபு.
ஒரு சாதாரண மனிதனுக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட;
“நம் மத்தியில் இருக்கிறார்” என்று அறிந்தும்,
பயத்தோடும் நடுக்கத்தோடும் தொழுதுகொள்ளுங்கள் என்று கட்டளையிட்டிருந்தும்;
சத்தியத்திற்குக் கீழ்படியாமல்;
இயேசுவின் பெயராலேயேக் கூடி கூச்சலும், அலறலும், குதித்தலும், ஆர்ப்பாட்டமும் ஆராதனை என்ற பெயரில் எப்படி செயல்படுத்துகிறார்கள்?
ஆண்டவர் அவர்கள் மத்தியில் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தே தைரியமாய் தங்களது ஆசைத்தீர கதறுவதும், அலறுவதும், குதித்தலும் நிறைவேற்றி *கடைசியில் வாரும் வாரும்* என்று கூப்பிடுவது அதனாலேயோ !! ??
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங். 2:11
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். சங். 89:7
அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. எபி. 12:28-29
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். சங். 95:6
பேசுகிறவருக்கு (தேவனுக்கு) நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? எபி. 12:25
கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது. ஆபகூக் 2:20
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1கொரி. 3:17
அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். பிலி. 2:12
சர்வ வல்லவரும் ஆண்டவரும் கர்த்தரும் மாட்சிமை நிறைந்தவரும் கிருபையுள்ளவரும் இராஜாதி இராஜாவுமாயிருக்கிற, பயத்தோடும் நடுக்கத்தோடும் நாம் தொழுது கொள்கிற தேவன் தாமே நம்மை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/bEwz5ukFzi4
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக