*மனிதனின் முயற்சியல்ல விளைச்சல்*
By : Eddy Joel Silsbee
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தன் வலிமையையும் வளர்ச்சியையும் அறியும்படி, தாவீது இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையை பார்க்க சொன்னார். 2சாமு. 24
தன் வளர்ச்சியை அறிய முயன்ற இந்த முயற்சி கர்த்தருடைய பார்வையில் தாவீதிற்கு தீமையாய் முடிந்தது.
அதுபோலவே,
சபையில் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை ஒருபோதும் தங்கள் பெலமாகவோ பெலவீனமாகவோ நினைத்து விட கூடாது...!
சொந்தமாக, சொந்த பெயரில், சொந்த முயற்சியில், சுய சட்டங்களோடு, சொந்த இலாபத்திற்காக, குடும்ப வளர்ச்சிக்காக துவங்கிய சொந்த நிறுவனங்களாக உங்கள் சபைகள் இருந்தால் அது எவ்வளவு பெரிதானது என்பதை பறைசாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள *சபையோ தேவனுடையது* !! அதற்கு கிறிஸ்துவே நிறுவனர், கிறிஸ்துவே தலைவர், கிறிஸ்துவே ஸ்தாபகர். எபே. 5:23; 1:22-23; 4:15; அப். 20:28; கொலோ. 1:18
கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் மனிதன் ஏற்படுத்திய கிறிஸ்தவ மதத்தில் அல்ல *கிறிஸ்துவையே தலையாகக் கொண்டுள்ள கிறிஸ்துவினுடைய சபையில்* அங்கத்தினராகிறார்கள். அப். 2:42; 5:14; 11:24.
3 பேர் ஆனாலும் 3,000 பேர் ஆனாலும், விளைச்சலை கொடுப்பது தேவன், அறுவடையை கொடுப்பது தேவன்.
நாமோ அற்பமானவர்கள்.
(வார்த்தையை) விதைப்பதும், நீர் பாய்ச்சுவதுமே நம் கடமை.
எப்படிப்பட்ட விஞ்ஞானியும், அற்புத அடையாள வித்தைக்காரனும், விதையை திறந்து செடியை துளிர்க்கும்படி வெளியே இழுத்துவிட முடியாது !! 1கொரி. 3:6.
ஆட்கள் சபையில் இருக்கிறார்கள் என்றால், அது ஊழியக்காரனாலேயோ ஊழியத்தினாலேயோ நிர்வாகத்தினாலேயோ திறமையினாலேயோ வந்தது என்று மெச்சிக்கொள்ள எவருக்குமே வேதம் அதிகாரம் கொடுக்கவில்லை. நாம் அனைவரும் அப்பிரயோஜனமானவர்கள் என்றே வேதம் சொல்கிறது. (லூக். 17:10)
ஜெபத்தினாலும், தேவ கிருபையினாலும் மாத்திரமே ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்படுகிறார்கள். (அப். 2:47)
அவர்களை தமது சபையில் சேர்ப்பது கர்த்தர் !!
பொழுது கடந்த கடைசி மணி நேரத்தில் இருக்கிறோம். சரியான வேலையாட்கள் மிகுதியாய் இன்னும் தேவை. மத். 20:6
சபையினுள் களைகளை பிடுங்கி உங்களது நேரத்தை வீணடிக்கவேண்டாம். அது நம்முடைய வேலையில்லை !! மத். 13:28-29; 39-40
உத்தமமாய் ஊழியம் செய்து, நம் கிரியைகளின் பூரண பலனை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/Abuitvoe5OI
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக